நீண்டநாளாக நீடித்து வந்த இஸ்ரேல்–காசா மோதலில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. காசா பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று மதியம் 12 மணியிலிருந்து அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு தொடங்கிய இஸ்ரேல்–ஹமாஸ் மோதல் இதுவரை சுமார் 65,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் இரு தரப்பினரிடமும் போரை நிறுத்த வலியுறுத்தி வந்தன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதி திட்டத்தின் முதல்கட்டத்துக்கு, இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்படி, சில பிணைக்கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் இன்று தொடங்கியுள்ளன.
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “போர்நிறுத்த ஒப்பந்தம் மதியம் 12 மணிக்கு அமலுக்கு வந்தது. பிணைக்கைதிகளை விடுதலை செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தெற்கு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நிலைமையை கண்காணித்து வருகின்றனர். ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் தக்க பதிலடி வழங்கப்படும்,” என கூறப்பட்டுள்ளது.
இந்த போர்நிறுத்தம் நீடித்து அமைதி நிலை திரும்புமா என்ற கேள்வி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.