மயிலாடுதுறை அருகே கழுக்காணி முட்டம் கிராமத்தில்
டிட்வா புயல் கனமழையால் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்த நிலையில் 7 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வடியாததால் பொதுமக்கள் அவதி. அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு:-
டிட்வா புயல் கனமழையால் கடந்த 29ஆம் தேதி ஒரே நாளில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் 14 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதற்கு முன்னரும் பெய்த கனமழையால் மயிலாடுதுறை அருகே கழுக்காணிமுட்டம் கிராமத்தில் உள்ள அப்பங்குளம், பெரியகுளம் வேப்பங்குளம் நிரம்பியது. பெரியகுளத்தில் ஒரு பகுதியில் கரை உடைந்ததாக குற்றம் சாட்டும் பொதுமக்கள் வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் ஸ்ரீ நகரில் 20 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்தது. 7 நாட்களாகியும் தண்ணீர் வடியாத சூழ்நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்துவதாகவும், தண்ணீர் வடியும் வடிகால் வாய்க்கால் எங்கள் பொறுப்பில் கிடையாது என்று அதிகாரிகள் தட்டிக் கழிப்பதால் கடும் அவதி அடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
















