திருவள்ளூர் மாவட்டம் சென்னை -அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் வேப்பம்பட்டு – பெருமாள்பட்டு இணைக்கும் வகையில் ரயில் கேட் எண் -14 பகுதியில் ஒன்றிய மாநில அரசின் நிதியில்
120 தூண் உடன் 2 கிலோமீட்டர் தொலைவில் 29.5 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுமான பணி கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது,ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் பணிகள் முடிக்கப்பட்டது,40 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் மேம்பாலம் அமையும் வழித்தடத்தில் உள்ள நிலத்தின் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடந்த 2014 ஆம் அதிமுக ஆட்சியில் தடை வாங்கியதால் கடந்த 2024 ஆண்டு வரை மேம்பாலம் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டது,அதன் பின்னர் திமுக ஆட்சியில் அதற்கு தீர்வு காணப்பட்டு திருத்தி அமைக்கப்பட்ட நிதியான 44.55 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி மீண்டும் 2024 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு கடந்த ஆண்டு இறுதியில் முடிக்கப்பட்டது, இன்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பயணம் செய்தார், இத்தகைய மேம்பால பணி இன்று திறக்கப்பட்டு இருப்பதால் பெருமாள்பட்டு, வேப்பம்பட்டு,கந்தன் கொல்லை,அயத்தூர், தொட்டிக்கலை,25 வேப்பம்பட்டு, சிறுகளத்தூர், தண்ணீர்குளம், அயலூர் உள்ளிட்ட 10 கிராமங்கள் பயனடைத்துள்ளனர்,அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 10 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை இருந்து வந்தது மேம்பாலம் திறக்கப்பட்டதால் 2 கிலோ மீட்டர் செல்லும் நிலை குறைந்துள்ளதால் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றி தந்த தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்,இந்நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர் சட்டமன்ற உறுப்பினர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
வேப்பம்பட்டு ரயில்வேமேம்பாலம்ADMKஆட்சிகிடப்பில் போடப்பட்டதைDMKஆட்சியால் முடிக்கப்பட்டு மக்கள் பயன் எ.வ. வேலு திறந்துவைத்தார்
