October 14, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

by Satheesa
August 16, 2025
in Bakthi
A A
0
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில் அமைந்துள்ளது. சித்ரகுப்தருக்கென தனி கோயில் அமைந்திருப்பதே தலத்தின் சிறப்பு.
சித்ரகுப்த பூஜையை முறையாகச் செய்தால் உயர்நிலை அடையலாம் என்பது திண்ணம். கேது பகவானின் அதிதேவதை சித்ரகுப்தர். ஆகையால் சித்ரகுப்தரை வணங்குவதால் கேதுவினால் துன்பம் உண்டாகாது. வளமான வாழ்வு, மேன்மை, ஞானம், மோட்சம் அனைத்தும் கிட்டும். சித்ரகுப்தரைக் போற்றும், ஓம் யமாய தர்மராஜாய ஸ்ரீசித்ரகுப்தாய வை நமஹமந்திரத்தையும் எழுதி, தங்கள் பெயர், முகவரி, அன்றைய தேதி மற்றும் முழு வரவு செலவு கணக்கை எழுதி, அதை மடித்து படத்தின்முன் வைத்து பூஜிப்பார்கள். அடுத்துவரும் ஆண்டில் எதிர்பார்க்கும் வரவு செலவையும் உத்தேசமாகக் குறித்து, அது நிறைவேற சித்ரகுப்தரின் ஆசியை வேண்டுவார்கள்.

முன்னொரு காலத்தில், சவுதாஸ் என்ற மன்னன் தற்போது சவுரா~;டிரம் எனப்படும் பிரதேசத்தை ஆண்டு வந்தான். கொடுங்கோலனாகவும், அசுரர்களை விடவும் மோசமாக ஆட்சி செய்து மக்களைத் துன்புறுத்தி வந்தான். தனது ஆணையில்லாமல் ஒரு செயலும் நடக்கவிட மாட்டான். தன்னை ராஜாதி ராஜன், பேரரசன் எனக் கூறிக்கொண்டான். ஒரு நாள், காட்டில் அவன் வேட்டையாடச் சென்ற போது தன் பரிவாரங்களை விட்டு வெகு தூரம் வழிதவறிச் சென்றுவிட்டான். அலைந்து திரிந்த சமயத்தில் அவன் செவியில்,

ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தந்நோ: லோகப் பிரசோதயாத்

என்று எவரோ சித்ரகுப்த கயாத்ரியை மந்திர உச்சாடனம் செய்யும் ஒலி விழுந்தது. சத்தம் வந்த திசை நோக்கிச் சென்றான். அங்கு சீடர்கள் புடைசூழ, தவசிகளும் முனிவர்களும் வேள்வி செய்வதைப் பார்த்து வெகுண்டான். என் ஆணையில்லாமல் இப்படியொரு யாகமா செய்கிறீர்கள்? நிறுத்தாவிட்டால், அனைவரையும் கொன்றுவிடுவேன் ! என்று கத்தினான்.

துறவிகள் அவனைச் சட்டை செய்யவில்லை. அதனால் மேலும் வெகுண்டு, வேள்வி நடத்தும் முதியவரை அணுகித் தன் உடைவாளால் அவரைக் கொல்ல வந்தான். அதைக் கண்ட ஒரு இளம் சீடன், அப்பனே ! நீ யார்? எதற்காக இடையூறு செய்கிறாய்? என்று வினவ, சௌதாஸ், நான் ராஜாதி ராஜன் சௌதாஸ். நீங்கள் எல்லாம் யார்? என்று கோபமாகக் கேட்டான்.

அந்தச் சீடனோ புன்முறுவல் பூத்து, சௌதாஸ்! ராஜாதிராஜன் என்பவர் சித்ரகுப்தர் ஒருவர்தான்! அந்தப் பட்டம் பெற வேறு எவருக்கும் தகுதியில்லை. நாங்கள் சித்ரகுப்த வம்சாவளியினரான காயஸ்தர்கள். எங்கள் குலதெய்வம் சித்ரகுப்தருக்கு பூஜை செய்கிறோம். தாங்களும் கலந்துகொண்டு புண்ணியம் பெறுங்கள். செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக இந்த பூஜை செய்து, நரகத்திலிருந்து விடுபட்டு சித்ரகுப்தரின் அருள்பெற முன் வாருங்கள் என்று பூஜையின் மகிமையை விளக்கினான். அதைச் செவிமடுத்த சௌதாஸ், தான் செய்த பாவச் செயல்களுக்கு வருந்தி மனம் மாறினான். வேள்வியில் கலந்துகொண்டவன், பின்னால் ஆண்டுதோறும் சித்ரகுப்த பூஜையை முறையாக நடத்தி ஆராதித்து வந்தான்.

அந்திமக் காலத்தில் உயிர்பிரிந்த அவனது ஆத்மாவை, யமதூதர்கள் யமலோகத்துக்கு இழுத்துச் சென்றார்கள். அங்கு சித்ரகுப்தர் யமனிடம், சௌதாஸின் கர்மவினைகளைத் தன் பதிவேட்டிலிருந்து படித்தார். பிரபு! இவன் செய்த பாவச் செயல்கள் எண்ணில் அடங்காது. அதர்மமே மேலோங்கி நிற்கிறது.

நரகத்தில்தான் இவன் உழல வேண்டும். ஆனால், வாழ்வின் பின்னாளில் மனம் திருந்தி, நம் இருவரையும் முறையாக பூஜித்துள்ளான். அதனால் இவனுக்கு, சொர்க்கலோகத்துப் பலனை அனுபவிக்க அனுமதிக்கலாம். பிரபு ! என்று கூற, யமனும் தலையசைத்து சம்மதித்தான். சித்ரகுப்தரின் வாக்குக்கு மறுப்பு ஏது! சௌதாஸ் சொர்க்கலோக வாசியானான்.

பார்வதி பரமேஸ்வரர் அருளால் அவதரித்தவர். பிள்ளையில்லா குறை நீங்க, இந்திரன் – இந்திராணிக்கு தெய்வப் பசு காமதேனு மூலம் அவதரித்தவர் என்று இவரது பிறப்பு பற்றிச் சொல்வதுண்டு. யமலோகத்தில் நிலவிய நிர்வாகச் சீர்கேட்டைச் சரிசெய்ய, பிரம்மன் தன் மனதுள் ரகசியமாக உருவகப்படுத்திய உருவத்தை இருத்தி, 11,000 ஆண்டுகள் ஈசனை நோக்கித் தவமியற்றினார். முடிவில், தன் மனதில் இருந்தவரே தன் முன், கையில் எழுத்தாணி ஓலைச்சுவடியுடன், இடையில் தொங்கும் உடைவாளுடன் தெய்வீகக் களை சொட்ட தோன்ற, தவத்தின் பலனை உணர்ந்தவராக அகமகிழ்ந்தார்.

ரகசியமாக என் உடம்பிலிருந்து காயம் தோன்றியதால், சித்ரகுப்தர் என அழைக்கப்படுவாய். உனது சந்ததியினர் காயஸ்தா என அறியப்படுவர் என்று அருளினார் பிரம்மன். தமிழகத்தில் இவர்கள் கருணீகர் என அழைக்கப்படுகிறார்கள். சித்ரகுப்தர் இவர்களது முழுமுதற் கடவுளாக வணங்கப்படுகிறார்.

பின்னர் நான்முகனின் ஆணைப்படி சித்ரகுப்தர் காளிதேவியை உபாசித்து, அவளது கருணையால் எண், எழுத்து இரண்டிலும் புலமைபெற்ற உலகின் முதல் மாணாக்கராக ஆனார். பிறகு, அவந்திகாபுரி சென்று மகா காலேஸ்வரரின் அருளால் கணக்கு வழக்குகளைப் பேரேட்டில் பதியும் திறமையைப் பெற்று, ஐப்பசி மாத யம துவிதியை நாளில் யமதர்மராஜனின் கணக்கராகப் பதவி ஏற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. தமிழகத்தில் சித்ரகுப்தருக்கென ஒரு சில கோயில்களே உள்ளன. அதில் முதன்மையானது இக்கோயில்.

இக்கோயிலில் சித்ரகுப்தருக்கு அபிN~கம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்
சித்திரை மாத பவுர்ணமி அன்று, சித்ரகுப்தருடைய ஜெயந்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

Tags: aanmigamkanchipuramtamilnaduThe Venerable Chitragupta Temple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஈஷா புத்துணர்வு கோப்பை 2025 காண விளையாட்டு போட்டி வாலிபால் போட்டிகள் துவங்கின 25 அணிகள் பங்கேற்பு

Next Post

விழுப்புரம் வி.மருதூர் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி நிகழ்ச்சி

Related Posts

மணிகண்டீஸ்வரர் திருக்கோயில்
Bakthi

மணிகண்டீஸ்வரர் திருக்கோயில்

October 14, 2025
இருதயாலீஸ்வரர் திருக்கோயில்
Bakthi

இருதயாலீஸ்வரர் திருக்கோயில்

October 14, 2025
திருமுருகநாதர் திருக்கோயில் – திருமுருகன்பூண்டி – திருப்பூர்
Bakthi

திருமுருகநாதர் திருக்கோயில் – திருமுருகன்பூண்டி – திருப்பூர்

October 13, 2025
ராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் திருக்கோயில்
Bakthi

ராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் திருக்கோயில்

October 13, 2025
Next Post
விழுப்புரம் வி.மருதூர் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி நிகழ்ச்சி

விழுப்புரம் வி.மருதூர் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி நிகழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா !

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா !

October 14, 2025
“கரூருக்கு விஜய் நேரடி டச்! எல்லாரையும் வேலுச்சாமிபுரம் கூட்டிட்டு வாங்க! புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் உத்தரவு

“கரூருக்கு விஜய் நேரடி டச்! எல்லாரையும் வேலுச்சாமிபுரம் கூட்டிட்டு வாங்க! புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் உத்தரவு

October 14, 2025
மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்புளுயன்சா காய்ச்சலில் பாதிப்பு !

மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்புளுயன்சா காய்ச்சலில் பாதிப்பு !

October 14, 2025
இளம் பெண் இருந்த கோலம்.. பார்த்ததுமே பதறிய பக்கத்து வீட்டுக்காரர்கள்

இளம் பெண் இருந்த கோலம்.. பார்த்ததுமே பதறிய பக்கத்து வீட்டுக்காரர்கள்

October 14, 2025
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது

0
தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

0
சென்னையில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் கொலை !

சென்னையில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் கொலை !

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 Oct 2025 | Retro tamil

Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது

October 14, 2025
தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

October 14, 2025
சென்னையில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் கொலை !

சென்னையில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் கொலை !

October 14, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 Oct 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 Oct 2025 | Retro tamil

October 14, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.