சென்னை திருவேற்காட்டில் தமிழக அரசின் அன்பு கரங்கள் திட்டம் தொடங்கப்பட்டது.
தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆவடி நாசர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பூந்தமல்லி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். அத்துடன் திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழாவினை தொடர்ந்து அமைச்சர் நாசர் பேசுகையில், காந்தி கூட தனது சுயசரிதையை குஜராத்தியில் எழுதி சுயநலத்தை காண்டிப்பித்திருப்பார். அதுபோல அண்ணாவும் காஞ்சிபுரத்திற்கு முன்னுரிமை கொடுத்து சுயநலத்தை காண்பித்தார்.
அந்த வகையில் நானும் ஆவடி பகுதி மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற்று பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் உரையை முடிப்பதுபோல நன்றி சொல்லி, இப்போது தான் உரையை தொடங்குகிறேன் என்று மாணவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
