பாலியல் குற்றங்களுக்கு எதிராக அதிக புகார்கள் வருவது தான் சமூக நலத்துறையின் வெற்றி அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நாகர்கோவில் வருகை தந்தார் , அப்போது செய்தியாளர்கள் சந்தித்த அவர் கூறுகையில் ,

சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களுக்கும் நடைமுறைக்கு கொண்டுவரபட்டுவிட்டது.
அன்புக்கரங்கள் திட்டத்தில் இன்னும் மக்கள் விண்ணப்பிக்கலாம். எத்தனை விண்ணப்பம் வந்தாலும் கொடுக்க முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்கள் நடமாட முடியாமல் உள்ளனர் என பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் உண்மை அது அல்ல.
இந்தியாவில் பாதுகாப்பான நகரம் சென்னை , கோயம்புத்தூர் தான் மத்திய அரசின் புள்ளி விபரம் கூறுகிறது.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் இந்த ஆட்சியில் தைரியமாக புகார் அளிக்க முன் வருகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் எதையும் பாராட்ட மாட்டார்கள். ஆளுங்கட்சியை குறை கூற வாய்ப்பு கிடைக்காதா என்ற நோக்கில் குற்றம் சொல்கின்றனர்.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் புகார் கூறும் பழைய நிலைமை தற்போது மாறி இருக்கிறது. அதிக அளவில் புகார் அளிக்க முன்வருகிறார்கள்.
பெண்களின் நிலை இன்று உயர்ந்திருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் பாலியல் குற்றச்சாட்டை மட்டும் தான் கூற முடியும் என்பதால் எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள்.
பாலியல் குற்றங்களுக்கு எதிராக அதிக புகார்கள் வருவது தான் சமூக நலத்துறையின் வெற்றி. பாலியல் குற்றங்களுக்கு எதிராக புகார் தரும் பெண்களை நாங்கள் மனமாற பாராட்டுகிறோம்.
அதற்கான விழிப்புணர்வை செய்து வெற்றி பெற்றுள்ளோம் என தெரிவித்தார். பேடியின் போது தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவர் சுரேஷ் ராஜன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

Exit mobile version