மகளிர் பள்ளி முன்பு பொங்கி வழியும் கழிவுநீரால் மாணவிகள் அவதி

மயிலாடுதுறை நகரில் பல ஆண்டுகளாக நீடிக்கும் பாதாளசாக்கடை பிரச்னை:- மகளிர் பள்ளி முன்பு பொங்கி வழியும் கழிவுநீரால் மாணவிகள் அவதி:- நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர பொதுமக்கள் கோரிக்கை:-

மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடங்கிய சில ஆண்டுகளிலேயே தோல்வியை சந்தித்த இத்திட்டத்தில், நகரில் பல்வேறு இடங்களில் சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு பொதுமக்களை அச்சுறுத்துவதும், ஆள்நுழைவுத் தொட்டி வழியாக கழிவுநீர் பொங்கி பெருக்கெடுத்து வெளியேறி சுகாதார சீர்கேடு ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை டபீர் தெருவில் உள்ள அரசு மகளிர் பள்ளி முன்பு கழிவுநீர் பொங்கி வழிந்து சாலையில் ஓடி வருவதால் மாணவிகள் மற்றும் அப்பகுதி மக்கள் துர்நாற்றம் காரணமாகவும், சாலையை கடக்க முடியாமலும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக இதேநிலை தொடர்வதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version