மாணவிக்கு பிரச்சனை… தாக்குதலில் இறங்கிய மாணவர்கள்.!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் ஸ்காட் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது ஒரே வளாகத்திற்குள் 2 பொறியியல் கல்லூரிகள் உள்ள நிலையில் இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தால் கேரளாவிற்கு கடந்த மூன்றாம் தேதி கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு ஆண் பேராசிரியர் (ஜான் சாமுவேல் ராஜ்) இரண்டு பெண் பேராசிரியர்கள் பதினாறு மாணவிகள் 29 மாணவர்கள் சென்றுள்ளனர் பேராசிரியர் மாணவிகளிடம் தவறாக பேசியதாகவும் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவர்கள் மற்றும் மாணவிகள் உடன் சென்ற பெண் பேராசிரியர்களிடம் புகார் அளித்ததாகவும் கல்லூரி நிர்வாகத்திற்கு இச்சம்பவம் தெரிவிக்கப்பட்டு விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் பேராசிரியருக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து மூன்றாம் ஆண்டு பயிலும் சேக் முகமது மைதீன், வசந்த் ஸ்ரீதரன், சுஜின்,முத்துராஜ் ஆகிய ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட மாணவர்கள் கல்லூரிக்குள் புகுந்து ஜான் சாமுவேல் ராஜ் என்ற பேராசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அருகில் இருந்த மற்ற பேராசிரியர்கள் தடுக்க முயன்றும் மாணவர்கள் பேராசிரியரை கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளது.இந்த நிலையில் பேராசிரியரை மாணவர்கள் தாக்கியதாக மேற்கண்ட ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல் அத்துமீறி நுழைதல், ஆபாச வார்த்தைகளால் பேசுதல், ஆயுதங்களைக் கொண்டு காயம் ஏற்படுத்துதல் ,ஆகிய நான்கு பிரிவுகளில் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. (191 (2), 329(4), 296 (b), 118 (1), ) .

பேராசிரியரை தாக்கிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கல்லூரி மாணவியிடம் தகாத வார்த்தைகள் பேசியதாக கூறப்படும் பேராசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்களிடையே எழுந்துள்ளது.

Exit mobile version