20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் செய்தனர்

திருவாரூர் ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தின் முன்பாக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
நேற்று இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள 1500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் மற்றும் ஓட்டுநர், பதிவரை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்பிட வேண்டும்.. ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும்.. மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி… தமிழக அரசை எதிர்த்து கோஷஙகள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வசந்தன் மாவட்ட செயலாளர் அமர்நாத் மாநில செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version