தவெக நிர்வாகிக்கு ஜாமீனில் இருக்கும் சிக்கல்..?

தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு வரும் திங்கட்கிழமை கரூர் அமர்வு நீதிமன்றத்தில் மனு அளிக்க உள்ளதாக வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன், கட்சி நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, வருகின்ற 14-ஆம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு, வரும் திங்கட்கிழமை கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு அளிக்க உள்ளதாக தவெக தரப்பு வழக்கறிஞர் அரசு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, முன் ஜாமின் கேட்டு மனு வழங்குவதற்கு முன்பாக மதியழகன் கைது செய்யப்பட்டதாலும், ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக ஜாமீன் மனு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version