திமுக ஆட்சியில் திமுகவினரிடம் இருந்து பெண்களை காக்க வேண்டிய அவலம் ! – எடப்பாடி பழனிசாமி

விழுப்புரம்: திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், ஒரு பெண்ணை ஆறு மாதங்களாக மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, “திமுக ஒன்றியச் செயலாளர் பதவியை பயன்படுத்தி அவலச் செயல்களில் ஈடுபட்டதாக வரும் தகவல்கள் பயங்கரமானவை. காவல்துறை ஒன்றும் செய்ய முடியாது என்று உரிமையாகப் பேசியதாக செய்திகள் கூறுகின்றன. திமுக ஆட்சியில், திமுகவினரிடமிருந்தே பெண்களை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அவர், “தன் சொந்தக் கட்சியில் கூட ஒழுங்கு ஏற்படுத்த முடியாத பொம்மை முதல்வர், தமிழக மக்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்? குற்றச்சாட்டில் இருக்கும் ஒன்றியச் செயலாளருக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

Exit mobile version