திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்காவிற்க்கு உட்பட்ட திருப்பணிப்பேட்டை அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலப்பகுதி, கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கண்கொடுத்தவணிதம் அருகே மேலராதாநல்லூர், திருப்பணிப்பேட்டை, விடயபுரம், தக்கலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ளது. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பலமுறை அறநிலையத்துறையின் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டும் இப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேறாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்அறநிலை துறைக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த முடிவெடுத்து, திருவாரூர் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ராணி தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் காவலர்கள் துணையுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் துணையுடன் அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான விடயபுரம் கிராமத்தில் உள்ள ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பில் இருந்த 16487 சதுர அடி இடம் மற்றும் மேலராதாநல்லூர் கிராமத்தில் உள்ள 20 லட்சம் மதிப்புள்ள 5616 சதுர அடி ஆக்கிரமிப்பில் இருந்த இடம் மீட்கப்பட்டு திருக்கோவில் வசம் கொண்டுவரப்பட்டது. மேலும் இந்த பகுதி கோவிலுக்கு சொந்தமானது.அத்துமீறி யாரும் பிரவேசிக்க கூடாது. மீறினால் காவல்துறை கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகையும் அறநிலையத்துறையால் வைக்கப்பட்டுள்ளது.
இதில் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் சரவணன், திருக்கோயில் செயல் அலுவலர் சுரேந்தர், பரம்பரை அறங்காவலர் கண்ணன் திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

















