மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்க தலைவராக வேலு குபேந்திரன் பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உள்ள நிலம் தொடர்பாக உரிமையியல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவரது வீட்டை சில தினங்களுக்கு முன்பே சிலர் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர், வீட்டின் வேலி பகுதியை தீ வைத்து எரித்தனர். தாக்குதல் நடத்திய நபர்கள் மீது காவல்துறை எந்தவித நடவடிக்கை எடுக்காத நிலையில் வருவாய் துறையினர் இதற்கு துணையாக நிற்பதாக தெரிவித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகியவற்றை கண்டித்து வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து நீதிமன்றம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
