திருமங்கலம் பகுதியில் தள்ளுவண்டி டிபன் கடை உரிமையாளரை தாக்கி பணம் பறித்துச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை, திருமங்கலம், T.V.நகர், காந்தி மெயின் ரோட்டில் வசித்து வரும் வெங்கடேஷன் அதே பகுதியில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த புதன்கிழமையன்று இரவு வழக்கம் போல் கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த பாடிகுப்பம் பகுதியைச்சேர்ந்த நித்திஷ்குமார் வெங்கடேஷன் பணம் கேட்டு கையால் தாக்கி, கத்தியைக்காட்டி மிரட்டி கல்லாவிலிருந்த பணம் ரூ.625-ஐ எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றார்.
இது குறித்து வெங்கடேஷன் A-5 திருமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
A-5 திருமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட
நித்திஷ்குமார், என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட நித்திஷ்குமார் ஏ5 திருமங்கலம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது
ஏற்கனவே 4 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி நித்திஷ்குமார் விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
