உரிமை மீட்க தலைமுறை காக்க என அன்புமணியின் பிரச்சார பயணத்தில் ஒரு பகுதியாக இன்று திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் கிறிஸ்தவ வன்னியர் மக்களின் MBC கோரிக்கை குறித்து பாதிரியார்கள், பொதுமக்கள் மற்றும் சமூக தலைவர்களுடன் அன்புமணி (தலைவர்-பாமக) ஆலோசனை செய்தார்.
பின் செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் பேட்டி
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவில் அந்த மாநில அரசு நடத்துகின்ற சாதி வாரிய கணக்கெடுப்பிற்கு தடை கிடையாது. நீதிபதிகள் சொன்ன கருத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசுக்கு மட்டுமல்ல மாநில அரசுக்கும் முழு அதிகாரம் இருக்கிறது. மாநில அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளனர். அவர்கள் கர்நாடகாவில் சாதி வாரி கணக்கெடுப்பு தாராளமாக நடத்தலாம் என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதற்குப் பிறகும் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்கு கணக்கெடுப்பு நடத்த உரிமை கிடையாது அதிகாரம் இல்லை என்று சொன்னால் நிச்சயமாக அது மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து தமிழ்நாட்டு முதலமைச்சரவர்கள் தமிழக அரசு தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு அதிகாரம் இல்லை மத்திய அரசு மட்டும்தான் எடுக்க வேண்டும் என்று பொய்யை சொல்லி வருகிறார்கள். சட்டமன்றத்தில் உள்ளே மற்றும் வெளியையும் இதே பொய்யை கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் கோரிக்கை விடுத்த பிறகும் சமூகநீதி என்று பேசுகின்ற திமுக அரசு சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது எவ்வளவு பெரிய துரோகம் தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் கர்நாடகா, பீகார் தெலுங்கானா, ஆந்திரா, ஒரிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது சில மாநிலங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசாணைப்படி நடத்தப்பட்டுள்ளது.
எவ்வளவோ மாநிலங்கள் நடத்தி வருகின்றனர் ஆனால், தமிழ்நாட்டில் மற்றும் நடத்த முடியாது என்று பொய்யை சொல்லுகின்ற முதலமைச்சரை, தற்போது தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த பொய் தற்போது மேலும் பொய்யாகிவிட்டது. நேற்று கர்நாடகா நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு இனியாவது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் இல்லை என்றால்
உங்கள் சாதி பெயர் பிடிக்கவில்லை என்றால் சமூகநீதி என பெயர் மாற்றிக் கொள்ளவும் இது அவசியமானது இது ஒரு சாதி பிரச்சனை கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி குடும்பங்களில் நிலையை கண்டறிய கண்டறிய வேண்டும். 1931 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி தான் 90 ஆண்டு காலமாக ஓட்டிக்கொண்டு இருக்கிறோம். தற்போது எடுக்கின்ற கணக்கெடுப்பு துல்லியமாக தகவல் தொழில்நுட்பத்துடன் எடுக்கலாம். அடுத்த 50 ஆண்டுகள் இந்த கணக்கெடுப்பை பயன்படுத்தலாம்.
மைக்ரோ லெவல் பிளானிங் செய்யலாம். சமூக நலத்திட்டங்களை கொடுக்கலாம் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தலாம் நியாயப்படுத்தலாம் அதோடு தமிழ்நாட்டிற்கு மற்றொரு முக்கிய காரணங்கள் இருக்கிறது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் 69 விழுக்காடு ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை என்று வேண்டுமானாலும் விசாரணைக்கு வரும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 69 சதவீத விழுக்காடு BC, SC, ST மக்கள் இருக்கின்றார்களா? ஒரு கேள்வி பிரதமரை கேட்டு உள்ளனர் அந்த கேள்வி நியாயப்படுத்த முடியவில்லை கணக்கெடுப்பு வைத்த தான் நியாயப்படுத்த முடியும் கணக்கெடுப்பு நடத்த இரண்டு மாதங்கள் தான் ஆகும் 500 கோடி செலவாகும்.
மூன்று லட்சம் அரசு ஊழியர்கள் இரண்டு மாதம் வேலை செய்தால் போதும் துல்லியமாக 70 கேள்விகள் வைத்து கணக்கெடுப்பு வைத்து இட ஒதுக்கீடு சம்பந்தமாக அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கலாம் நலத்திட்டங்கள் கொடுக்கலாம். சமூகநீதி துல்லியமாக நிலை நாட்டலாம். அதெல்லாம் எனக்கு வேண்டாம் வசனம் மட்டும் தான் நாங்கள் பேசுவோம் தந்தை பெரியார் அண்ணா உடைய கொள்ளு பேரன், கருணாநிதி மகன் என வசனம் தான் பேசுவோம். சமூகநீதி எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள். தமிழ்நாட்டின் இன்றைய உயிர்நாடி பிரச்சனை.
இது எல்லா சமுதாயத்திற்கும் சார்ந்த பிரச்சினை பட்டியல் இன சமுதாயம் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டியல் இன சமுதாயத்திற்கு இரண்டு சதவீத அதிக கூடுதல் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதில் இல்லாமல் பட்டியல் இனத்தில் 78 உட்பிரிவுகள் உள்ளது. உட்பிரிவுகளில் சில பெயர்களுக்கு தான் கிடைக்கிறது பல பெயர்களுக்கு கிடைப்பதில்லை. யாருக்கும் கிடைக்கவில்லை அதனை கண்டறிவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
எம் பி சி -யில் 115 சமுதாயம் இருக்கிறது. யாருக்கு கிடைக்கிறது யாருக்கு கிடைக்கவில்லை என்பது தெரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பிசியில் 140 சமுதாயம் உள்ளது. இதில் அதிக யார் எடுத்து செல்கின்றனர். யாருக்கு கிடைக்கவில்லை என்பது கணக்கெடுப்பு நடத்தினால்தான் தெரியவரும். இஸ்லாமியர் களுக்கு கூட 3 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. ஏழு உட்பிரிவுகள் உள்ளது யாருக்கு அதிகமாக கிடைக்கிறது. யாருக்கு கிடைக்கவில்லை.
இந்த அடிப்படை கூட தெரிந்து கொள்ள மாட்டேன். இதை தெரிந்து கொள்ள எனக்கு மனமில்லை. என்று உள்ளார் முதலமைச்சர். திமுகவும் முதலமைச்சர் ஸ்டாலின் இருவரும் சமூக நீதிக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம் வகை இதனை பார்க்கிறேன். தமிழ்நாடு மக்கள் இதனை மன்னிக்க மாட்டார்கள். கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்ற விழா நடத்தி மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகின்றனர். கல்வி பாதாளத்தில் இருக்கிறது. அதற்கு உதாரணம் 37500 அரசு பள்ளிக்கூடங்கள் இருக்கிறது. 12500 தனியார் பள்ளிக்கூடங்கள் இருக்கிறது.