வலங்கைமான் அருகே மணலூர் மற்றும் மதகரம் ஆகிய இரண்டு ஊராட்சி கிராம மக்கள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் பொதுமக்கள் அறிவிப்பு..
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா மணலூர் மற்றும் மதகரம் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் வசித்து வருகிறார்கள் இந்த இரண்டு ஊராட்சிகளிலும் உள்ள சுடுகாட்டுக்கு செல்லும் சாலை உட்பட பல்வேறு தெரு மற்றும் இணைப்பு சாலைகள் கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருப்பதாகவும் தற்பொழுது பெய்த மழை காரணமாக அவை மேலும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவற்றை சீரமைக்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பல முறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆகவே இந்த சாலைகளை சீரமைத்துக் கொடுக்காததால் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் முதியவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் , பள்ளி மாணவர்கள் சாலையில் பயணிக்கும் பொழுது கீழே விழும் சாலைகள் மோசமாக இருப்பதாகவும் , சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து கொடுக்க வேண்டும் இல்லையென்றால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம் என இந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்
இதுகுறித்து வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் கேட்ட பொழுது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

















