மயிலாடுதுறையில் DMKசார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டத்தில் காலி இருக்கைகளுக்கு  நடுவே உரையாற்றிய தலைமைக் கழக பேச்சாளர்

மயிலாடுதுறையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டத்தில் காலி இருக்கைகளுக்கு நடுவே உரையாற்றிய தலைமைக் கழக பேச்சாளர் , கூட்டத்திற்கு வந்த அனைவரும் சென்றதால் இறுதியாக மேடையில் இருக்கக்கூடியவர்கள் மட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என முழக்கத்தை எழுப்பி விட்டு கூட்டத்தை நிறைவு செய்தனர் :-

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில்ப மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தலைமைக் கழக பேச்சாளர் கம்பம் செல்வேந்திரன் பங்கேற்றனர். மேலும் அமைச்சர் மெய்யநாதன் சிறப்புரையாற்றி பேசி 8.30 மணி அளவில் தனது உரையை நிறைவு செய்தார். தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர் கம்பம் செல்வேந்திரன் பேசிக் கொண்டிருக்கும்போது பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் வெளியேறத் துவங்கினார். அப்போது கூட்டத்திற்கு வந்த அனைவரும் புறப்பட்டு சென்ற நிலையில் காலி நாற்காலிகளுக்கு இடையே உரையை நிகழ்த்தினார். மக்கள் கூட்டம் கலைந்து செல்வதை அறிந்த பேச்சாளர் இரவு 8:50 மணியளவில் பேச்சை நிறைவு செய்தார். இறுதியாக தமிழ்நாடு வெல்லட்டும் என்று அமைச்சர் உள்ளிட்ட மேடையில் வீற்றிருந்த பொறுப்பாளர்கள் முழக்கமிட்டனர். அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் பெரும்பாலானோர் வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version