வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜசுவாமி்ஆலயத்தில் கடந்த 6ஆம்தேதி் கொடி் ஏற்றத்துடன் துவங்கி பங்குனி்உத்திரபெருவிழா நடைப்பெற்று வருகிறது.
இவ்விழாவின் 20 ஆம் நாள் விழாவில். அருள்மிகு சந்திரசேகரர் பூதவாகனத்தில் எழுந்தருளி சப்பரத்தில் வீதியுலா நடைப்பெற்றது.
இதையொட்டி அருள்மிகு வினாயகர்,சுப்ரமணியர்,சண்டிகேஸ்வர்ர் மற்றும் தருனேந்திரசேகரி சமேத சந்திரசேகரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது.
தொடர்ந்து சந்திரசேகர சுவாமி் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பூத வாகனத்தில் எழுந்தருள செய்யப்பட்டது.
வினாயகர.,சுப்ரமணியர்,சண்டிகேஸ்வர்ஆகிய பரிவாரசுவாமிகளுடன் பூத வாகனத்தில் சந்திரசேகரர் கிழக்கு கோபுர வாசல் எதிரே கோடி் தீபாரதனை முடித்துக்கொண்டு கீழவீதியில் தேரடி வந்தடைந்த பின்பு பூதவாகனத்தில் இருந்த சந்திரசேகர்ர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி் நான்கு ரத வீதிகளிலும் வீதியுலா நடைப்பெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
