உலகத் தமிழ்ச் சங்கத்தில் இன்று நடைபெற்ற “தமிழ் முழக்கம்” மேடைப்பேச்சு மற்றும் ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பன்னாட்டுப் பயிலரங்கத் தொடக்க விழா பெரும் அளவில் கவனம் ஈர்த்தது. அக்டோபர் 22 முதல் 27 வரை நடைபெற உள்ள இந்த பன்னாட்டுப் பயிலரங்கத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், பேச்சாளர் சுகிசிவம், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, சட்டமன்ற உறுப்பினர் தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
விழா முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளி வளாகங்களில் தேங்கிய மழை நீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பள்ளிகளில் மின் கசிவுகள் உள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு, மழைக்காலங்களில் விடுமுறை அளிப்பதற்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கரூரில் சிலர் வெளியிட்ட அழுத வீடியோ காட்சிகளுக்கு விமர்சனம் எழுந்ததற்கு அவர் பதிலளித்தார் :
“உணர்ச்சியும் அறிவும் சமநிலை வாய்ந்த பேச்சுகளாக இருக்க வேண்டும். உணர்ச்சி அதிகமாகி அறிவு குறைந்தால் விலங்குகளுக்கு சமமாகிறது; அறிவு அதிகமாகி உணர்ச்சி குறைந்தால் மரத்திற்கு ஒத்ததாகும். முதலில் நாம் மனிதர்கள் என்பதை உணர வேண்டும். கல்லை கடவுளாக்கக் தெரிந்த மனிதன் தன்னை மனிதனாக்க மறந்துவிட்டான்” என்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அவர் கூறிய கருத்துகள், பேச்சாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துக்காட்டாகும் என்றும், தமிழ் இனத்தின் உயர்வு மற்றும் பண்பாட்டை முன்னிலைப்படுத்தும் முக்கிய உரையாகும்.
 
			
















