திருமங்கை மன்னன் பெருமாளிடம் நகையைப் பறிக்கும் போது ஆழ்வாராக அருளச்செய்த வீடு உற்சவம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய சிறப்பு கொண்டவர் திருமங்கையாழ்வார் இவர் ஆழ்வாராக அருள் செய்யப்படுவதற்கு முன்னர் குருநில மன்னனாக திருமங்கை மன்னன் என்று அழைக்கப்பட்டு வந்தார். திருமங்கை ஆழ்வாரின் சிறப்பை உணர்த்தும் வகையில் வேறு உற்சவம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடத்தப்பட்டது. இதில் குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் வேடைக்கு செல்லும் திருக்கோலத்தில் ராஜகோபால சுவாமி வந்தார். முன்ஒரு காலத்தில் திருமங்கை மன்னன் குதிரையில் வருவது கடவுள் என தெரியாமல் அவரிடம் இருந்த நகைகளை பறிக்க தொடும் போது பெருமாளின் திருக்கரம் பட்டதால் அவரின் அழகில் மயங்கி கருணைசெய்ய வேண்டுகிறார். அப்போது பெருமாளும் திருமங்கை மன்னனின் அன்பை ஏற்று அவரை ஆழ்வாராக அருளிச்செய்த பின்னர் திருமங்கையாழ்வார் என வைணவ வழிபாட்டில் வருகிறார். இந்த நிகழ்வு வேடுபறி உற்சவம் என கொண்டாடப்படுகிறது. மன்னார்குடியில் நேற்று இரவு கொண்டாடப்பட்ட இந்த உற்சவத்தில் தங்கநகைகளை அணிந்து வந்த பெருமாளிடம் திருமங்கை மன்னன் நகைகளை பறிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.
தங்க குதிரை வாகனத்தில் வந்த பெருமாளிடம் திருமங்கை மன்னன் நகைபறித்து பின்னர் இறைவனிடம் சரணடைவதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
திருமங்கை மன்னன் பெருமாளிடம் நகையைப் பறிக்கும் போது ஆழ்வாராக அருளச்செய்த வீடு உற்சவம்
