மனைவி நல விரும்பும் வேட்பு விழா நிகழ்ச்சி நடத்திய அறக்கட்டளை

மனைவி நல விரும்பும் வேட்பு விழா நிகழ்ச்சி நடத்திய அறக்கட்டளை

திருமண பந்தத்தின் மறு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட தம்பதியர்

சென்னை கொளத்தூர் டீச்சஸ் காலனியில் அமைந்துள்ள மனவள கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்புவிழா என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இந்த நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட தம்பதியர்கள் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சியில் திருமண நிகழ்வின் போது தம்பதியர்கள் தங்கள் வாழ்வில் இணைந்திருப்பதற்காக எடுத்துக்கொண்ட உறுதி மொழியை புதுப்பிக்கும் விதமாக உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது தம்பதியர்கள் கணவன் மனைவி என இருவரும் தங்கள் கரங்களில் மேல் கரங்களை வைத்து தங்களுக்குள் இருக்கின்ற அன்பை வெளிப்படுத்த விதமாக ஒருவரை ஒருவர் நேர்முகமாக பார்த்துக் கொண்டு தங்கள் திருமண பந்தத்தின் உறுதி மொழியை புதுப்பித்தனர் கணவன் மனைவிக்கு மாலை அணிவித்தும் மனைவி கணவனுக்கு மாலை அணிவித்தும் தங்கள் திருமண வாழ்வில் துவக்கத்தில் இருந்தது முடிவுவரை ஒன்றிணைந்து இருப்போம் என்றும் ஒருவரை ஒருவர் வாழ்த்தி கொள்ளவும் ஒருவருக்கொருவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

இந்த நிகழ்ச்சியில் வயதான தம்பதியினர் முதல் இளம் தம்பதியர்கள் வரை கலந்து கொண்டு நிகழ்ச்சியில் தங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்தும் மன அழுத்தங்களிலிருந்தும் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது என்கின்ற யோகா சிந்தனைகளையும் மற்றும் கணவன் மனைவியின் மீது நலம் விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்து விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது

அத்துடன் இன்றைய காலகட்டங்களில் இளம் திருமண தம்பதியர்களின் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்ற நிலையில் கணவனை மனைவியும் மனைவியை கணவனும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வு நடைபெற்று வருவதாகவும் திருமண பந்தத்தில் அனைவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் ஜோடிகளாக பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Exit mobile version