செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா: பக்தர்கள் தீ குழியில் நடந்து சென்றும், குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டும் தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்:-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள புகழ்வாய்ந்த கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. வேண்டுவொருக்கு வேண்டுதலை நிறைவேற்றி தரும் இக்கோவிலின் சித்திரை பெருவிழா கடந்த 21ஆம் தேதி காப்பு கட்டுதளுடன் தொடங்கி தினந்தோறும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா காட்சி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி வல்லம் கிராமத்தில் இருந்து சக்தி கரகம் சிறப்பு பூஜைகள் செய்து காப்பு கட்டி மஞ்சள் உடை உடுத்தி விரதமிருந்த 100 க்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக மேளதாள வாத்தியங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர். கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் சக்தி கரகம் இறங்கியதை அடுத்து பக்தர்கள் தீ குழியில் நடந்து சென்றும், குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டும் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியது காண்போரை பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் செம்பனார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
