மயிலாடுதுறை மாவட்டம். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.
மழையால் பாதித்த பயிர்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு. தமிழக முதல்வரிடம் விவசாயிகளின் குறைகளை எடுத்து சொல்லி நிவாரணம் வாங்கித் தராத அமைச்சர் தற்போதைய விவசாயத்துறை அமைச்சர். விவசாயிகளின் நலனை பங்கு கொள்ளும் சூப்பர் அமைச்சர் தமிழக விவசாயத்துறை அமைச்சராக அமைச்சர் மெய்ய நாதனை நியமிக்க வேண்டும் அப்பையாவது விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி பகிரங்கமாக சொல்லி முழக்கமிட்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது இதில்
டெல்டா பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் பேசுகையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறிபெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவித்து இதுநாள் வரை வழங்கப்படவில்லை. கடந்தவாரம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வேளாண்மைத்துறையினர் முழுமையாக கணக்கெடுப்பு செய்யவில்லை. பயிர் காப்பீடு செய்வதற்கு கோயில் நிலங்கள் மற்றும் குத்தகை நிலங்களை ஆன்லயனில் பதிவேற்றம் செய்ய முடியவில்லை அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். பயிர் பாதிப்பு கணக்கெடுப்பில் ஜிபிஆர்எஸ் உடன் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்வதற்கு நெட்ஒர்க் கிடைக்காததால் பணிகள் பாதிப்படுவதை தவிர்க்க வேண்டும். தமிழக விவசாயிகளின் நலனை தமிழக முதல்வருக்கு எடுத்த கூறி நிவாரண பெற்று தராத அமைச்சர் தற்போது உள்ளார். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு எங்களுக்காக குரல் கொடுக்கும் சூப்பர் மந்திரி அமைச்சர் மைய நாதனை விவசாயத்துறை அமைச்சராக நியமிக்க வேண்டும். அப்பையாவது நிவாரணம் கிடைக்கும் என பகிரங்கமாக விவசாயி அன்பழகன் கூறியதற்கு அனைத்து விவசாயிகளும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, பருதி என்ற விவசாயி பேசுகையில்
டிரான்ஸ்பாம்கள் பழுதடைந்தால் அதனை மாற்றுவதற்கு நாகை, திருவாரூர் மாவட்டத்திற்குத்தான் இன்னமும் செல்ல வேண்டியுள்ளது. அதற்கான செலவினங்களை விவசாயிகளிடம்தான் மின்வாரிய ஊழியர்கள் கேட்கின்றனர் இதனால் விவசாயிகள் பாதிப்படையக்கூடிய சூழல் உள்ளது. குத்தகை நிலங்களில் சாகுபடி செய்பவர்கள் பயிர்காப்பீடு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர் அதில் உள்ள பிரச்னையை உடனடியாக சரிசெய்ய வேண்டும். என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கையில் முன்வைத்தனர்.


















