கோ-ஆப்-டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை  மாவட்டஆட்சியர் துவங்கி பார்வையிட்டார்

கோ ஆப் டெக்ஸ் மயிலாடுதுறை விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்து பார்வையிட்டார்:-

தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரியமான துணிரகங்களை இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர முக்கிய பங்காற்றி வருகின்றன. இதனிடையே மயிலாடுதுறை கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை இன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் துவங்கி வைத்தார். இதில் சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், சேலம் பட்டுப்புடவைகள், திருபுவனம் போன்ற ஊரில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், நெகமம் மணல்மேடு, ஜெயங்கொண்டம், கூறைநாடு புடவைகள் பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உரைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள் திரைச்சீலைகள், கால் மிதியடிகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக கொண்டுவரப்பட்டுள்ளது .

இதனைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் புடவை எடுத்தார். இந்த ஆண்டு கடலூர் மண்டலத்திற்கு 8.75 கோடி விற்பனை குறியீடாகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு 70 லட்சமும் சீர்காழி விற்பனை நிலையத்திற்கு 28 லட்சமும் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மாதாந்திர சிறு சேமிப்பு திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப மாதந்தோறும் ரூபாய் 300 முதல் 3000 வரை 11 மாத தவணைகள் மட்டும் செலுத்தி 30 சதவீதம் வசதியுடன் அனைத்து அரசு பணியாளர்களுக்கும் கடன் விற்பனை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது என்பதால் கைத்தறிக்கு கைகொடுத்து உதவிட மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Exit mobile version