ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் திரு உருவப்படத்தை திறந்து வைத்து தமிழக முதல்வரின் உரையை மாவட்ட நிர்வாகிகள் கண்டு ரசித்தனர்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் திரு உருவப் படத்தை திறந்து வைத்து தமிழக முதல்வரின் உரையை மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கண்டு ரசித்தனர் :-

பிரிட்டனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பெரியார் உருவப் படத் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். பெரியாரின் படத்தை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார். இதனிடையே இந்த நிகழ்வை மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் , எம் எல் ஏ ரூமான நிவேதா முருகன் தலைமையில் மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எல்இடி துறை மூலம் கண்டுகளித்தனர். மேலும் ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு முதல்வரின் உரையை பார்வையிட்டனர்.

Exit mobile version