மயிலாடுதுறை அருகே விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை பயன்படுத்த குத்தகைதாரர் தடைவிதித்ததால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொண்டு செல்ல முடியாமல் பெண்விவசாயி தவிப்பு. மாவட்ட ஆட்சியரகம் முன்பு சாலைமறியல். போக்குவரத்து பாதிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அகரக்கீரங்குடி கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான 7 ஏக்கர் விவசாய நிலம் மறையூர் வடிகால் வாய்க்கால் அருகே உள்ளது. இந்த வயலுக்கு செல்வதற்கு தனியார் ட்ரஸ்ட்க்கு சொந்தமான நிலத்தின் வழியை ஜெயலட்சுமி பயன்படுத்தி வந்தார். டிரஸ்டுக்கு சொந்தமான இடத்தில் குத்தகை சாகுபடி செய்து வரும் தயாளன் பாதையை பயன்படுத்த ஜெயலெட்சுமிக்கு தடை விதித்துள்ளார். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வந்ததால் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அமைதிப் பேச்சுவார்த்தை மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மூங்கில் குத்தினை சுத்தம் செய்து மாற்று வழியில் பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனை தயாளன் ஏற்றுக் கொண்டதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் விஜயலட்சுமி 7 ஏக்கரில் குருவை சாகுபடி செய்து மாற்று வழிப் பாதையை பயன்படுத்த மீண்டும் தயாளன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மயிலாடுதுறை வட்டாட்சியர் சுகுமாறன், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.

















