மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ. 3,000 ரொக்கப்பணம் வழங்கும் திட்டம் இன்று முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் அருகே உள்ள குமரபுரம் பகுதியில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் எஸ்.எம்.டி. கவிதா கல்யாணசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் ரூ. 3,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை வழங்கி விநியோகப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய எஸ்.எம்.டி. கவிதா கல்யாணசுந்தரம், “தமிழக அரசு ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையைச் சீரும் சிறப்புமாக அவர்கள் கொண்டாடுவதை உறுதி செய்து வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ள ரூ. 3,000 ரொக்கப்பணம் குடும்பத் தலைவிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்,” என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காரமடை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்து, அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்தார்.

இந்த விழாவில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விநியோகத்தின் போது கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தகுதியுள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தடையின்றிப் பரிசுத் தொகுப்பு கிடைக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழக அரசின் இந்தச் சிறப்புப் பொங்கல் பரிசினைப் பெற்றுக் கொண்ட குமரபுரம் பகுதி பொதுமக்கள், முதலமைச்சருக்குத் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version