பூமியை நெருங்கும் பேரழிவு – ஜூலை 5 ல் நடந்தே தீரும்… யாரு சொன்னது தெரியுமா ?

ஜப்பான் நாட்டை சேர்ந்த மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி என்பவரை “புதிய பாபா வங்கா” என்று அழைக்கின்றனர். இவர் வரும் காலம் குறித்துப் பல கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, ஜூலை 5ம் தேதி ஒரு பேரழிவு ஏற்படும் என்றும், ஜப்பானுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையே இருக்கின்ற கடல் பகுதியில் பிளவு ஏற்படும் என்றும், சுனாமி அல்லது மிகப் பெரிய பூகம்பம் ஏற்படும் என கணித்திருக்கிறார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு 18,000 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த ஜப்பானில் ஏற்பட்ட டோஹோகு நிலநடுக்கம் மற்றும் சுனாமியை அவர் முன்பு துல்லியமாகக் கணித்திருந்தார்.

இதனால் ஜப்பானுக்குச் செல்வோர் விமான முன்பதிவுகள் 83% குறைந்து போயுள்ளது. ஹாங்காங்கில் மட்டும் 50% வரை புக்கிங் குறைந்திருக்கிறது. பலரும் இவரது கணிப்பால் தங்கள் விடுமுறை டிரிப்பை ரத்து செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இது தொடர்பாக மியாகி மாகாண ஆளுநர் யோஷிஹிரோ முராய் என்ன சொல்கிறார் என்றால், சமூக வலைத்தளங்களில் ஆதாரமற்ற வதந்திகள் பரவுவது சுற்றுலாத் துறையைப் பாதித்தால் அது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும் என்றும், ஜப்பானியர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பித்துச் செல்ல தேவையில்லை. மேலும், சர்வதேச சுற்றுலாப் பயணிகளும் கூட வதந்திகளைப் புறக்கணித்துவிட்டு ஜப்பான் வர வேண்டும் என்று நான் நம்புகிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version