February 12, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவேடகத்தில் ‘மரணக் குழியாக’ மாறிய பாழடைந்த மேல்நிலை நீர்த்தொட்டி சமூக விரோதிகளின் கூடாரத்தால் பொதுமக்கள் அச்சம்!

by sowmiarajan
January 2, 2026
in News
A A
0
திருவேடகத்தில் ‘மரணக் குழியாக’ மாறிய பாழடைந்த மேல்நிலை நீர்த்தொட்டி சமூக விரோதிகளின் கூடாரத்தால் பொதுமக்கள் அச்சம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மதுரை மாவட்டம் திருவேடகத்தில் வைகையாற்றுப் படித்துறை அருகே மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ள பழைய மேல்நிலை குடிநீர் தொட்டியால் எந்த நேரமும் பெரும் விபத்து நிகழக்கூடும் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே மேலோங்கியுள்ளது. பயன்பாடின்றி கைவிடப்பட்ட இந்தத் தொட்டி, தற்போது சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியிருப்பதுடன், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

திருவேடகம் வைகையாற்றுப் படித்துறையில் அமைந்துள்ள புகழ்பெற்ற துர்க்கையம்மன் கோயில் அருகே, கற்களால் கட்டப்பட்ட பழமையான மேல்நிலை குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை ஒரு காலத்தில் பூர்த்தி செய்து வந்த இந்தத் தொட்டி, காலப்போக்கில் பராமரிப்பின்றி சிதிலமடைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டிலிருந்து கைவிடப்பட்டது. தற்போது இந்தத் தொட்டியின் மேல் பகுதியில் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்து புதர் போலக் காட்சியளிப்பதுடன், கட்டிடத்தின் பல இடங்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்தத் தொட்டியை அகற்ற அதிகாரிகள் முன்வராதது வேதனைக்குரியது.

இந்த ஆபத்தான நிலைக்கு மத்தியில், தொட்டியின் கீழ்ப்பகுதியில் உள்ள அறை தற்போது மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளது. அறையின் உள்ளே மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் வாட்டர் கேன்கள் மலை போலக் குவிந்து கிடக்கின்றன. மேலும், அந்த அறையின் தரையில் திடீரென 5 அடி ஆழத்திற்குப் பெரிய பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. இரவு நேரங்களில் இப்பகுதியில் முறையான மின்விளக்கு வசதி இல்லாததால், அந்தப் பகுதிக்குத் தெரியாமல் வருபவர்கள் இந்தப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஆற்றுப் படித்துறைப் பகுதியில் இத்தகைய சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவது பக்தர்களையும் பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. “பாழடைந்த இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இந்த மதுக்கூடம் குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை” என அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, வாடிப்பட்டி ஒன்றிய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, இந்த ஆபத்தான குடிநீர் தொட்டியை அடியோடு அகற்றி, அப்பகுதியைச் சீரமைக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: danger dilapidatedstructureTankthiruvedagamwater
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மேலூரில் 155 பதக்கங்களைக் குவித்து ‘போதிதர்மா’ பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சாதனை!

Next Post

ஆக்கிரமிப்புப் பிடியில் சிக்கிச் சீரழியும் விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் நிழற்குடை இன்றி தவிக்கும் பயணிகள்

Related Posts

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு
News

February 11, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சிறுமி பாலியல் வழக்கு : சம்பவ இடத்தில் குற்றவாளியிடம் வீடியோ வாக்குமூலம் !

July 31, 2025
9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

February 10, 2026
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

February 10, 2026
மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

0
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

0
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

0
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

0
மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

February 11, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

February 11, 2026
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

February 11, 2026
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

February 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.