மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக மறியல் போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக மறியல் போராட்டம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தரையில் படுத்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கைது….

ஆந்திரா கேரளா, கர்நாடக மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் உதவித்தொகை அதிகரித்து வழங்க வலியுறுத்தி
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று துவங்கி மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தரையில் படுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Exit mobile version