மங்கைநல்லூர் தத்தங்குடியில் தத்தசோழேஸ்வரர், வெற்றி விநாயகர், வேம்படி அய்யனார் ஆலயங்களின் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் தத்தங்குடியில் பழமை வாய்ந்த தத்தசோழேஸ்வரர், வெற்றி விநாயகர், வேம்படி அய்யனார் ஆலயங்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் :-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மங்கைநல்லூர் அருகே தத்தங்குடியில் பழமை வாய்ந்த பார்வதி அம்பாள் சமேத தத்தசோழேஸ்வரர் ஆலயம் குளக்கரை வெற்றி விநாயகர் ஆலயம், மன்மதன் ஆலயம் மற்றும் வேம்படி அய்யனார் ஆலயம் ஆகியவை அமைந்துள்ளது. ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது இதனை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை நான்காம் காலயாக சாலை பூஜைகள் பூர்ணாகுதியுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஆலய கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து மூலவர்கள் மகாபிஷேகம் நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version