திருப்புங்கூரில்  நந்தி பகவான் விலகி நின்ற சௌந்தரநாயகி உடனுறை சிவலோகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகவிழா

சீர்காழி அருகே திருப்புங் கூரில் நந்தனாருக்காக நந்தி பகவான் விலகி நின்ற சௌந்தரநாயகி உடனுறை சிவலோகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா.தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருப்புங்கூர் கிராமத்தில் சௌந்தரநாயகி உடனுறை சிவலோகநாதசுவாமி கோவில்அமைந்துள்ளது. புங்க மரத்தடியின் கீழே சிவ பெருமான் தரிசனம் கொடுப்பதால் திருப்புங்கூர் என வழங்கப் படுகிறது. மூலவர் அம்மன்- சவுந்தரநாயகி, சொர்க்க நாயகி தலவிருட்சம் புங்கமரம். தீர்த்தம் – ரிஷப தீர்த்தம், தேவேந்திர தீர்த்தம், நந்தனார் தீர்த்தம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் செய்திட முடிவு செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் திருப்பணிகள் ரூபாய் 2 கோடி மதிப்பில் நடைபெற்று வந்தது. கோயில் ராஜகோபுரம் உள்ளிட்ட சுவாமி, அம்பாள் சன்னதி கோபுரங்கள் விமான கலசங்கள் பிரகாரங்கள் மேல் தளம் உள்ளிட்ட அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தது.இதனை அடுத்து ஆறு காலையாக சாலை பூஜைகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்றது. இன்று காலை ஆறாம் காலை யாகசாலை பூஜை நிறைவுபெற்று மகா தீபாரனை நடைபெற்றது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. விழாவில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து சுவாமி அம்பாள் சன்னிதிகளில் மூலவர்களுக்கு மகா அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.

Exit mobile version