1975 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் எமர்ஜென்சி நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது ஜூன் மாதத்துடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவு கூறும் வகையில் நாடு முழுவதும் பாஜக சார்பில் மகளிர் அணி இளைஞரணி சார்பாக நிர்வாகிகள் மாதிரி பாராளுமன்றங்கள் நடத்தப்பட்டு வருகிறது
நெருக்கடி நிலை காலகட்டத்தின் போது அடிப்படை உரிமைகள் எவ்வாறு பறிக்கப்பட்டது லட்சக்கணக்கான சிறையில் அடைக்கப்பட்ட கொடுங்கோல் ஆட்சி கலை இலக்கியம் போன்று இயங்கிக் கொண்டிருந்தவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது
நீதித்துறை எவ்வளவு நெருக்கடியான நிலையில் இருந்தது டெல்லியில் ஏழை மக்களின் வீடுகள் லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்த காலம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு கட்டாய கருத்தடை சிகிச்சைகள் மூலம் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டது
நாட்டில் பல்வேறு இடங்களில் எந்தவித அறிவிப்புகளும் கொடுக்காமல் பல்வேறு தரப்பினர் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகாலம் சிறையில் அடைக்கப்பட்டது
இதுகுறித்து இன்றைய தலைமுறை காலத்திற்கு எடுத்துக் கூறும் வகையில் மீண்டும் ஒரு முறை ஜனநாயக மாண்புகள் விலை போகாமல் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கும் குடும்பத்திற்கும் அடிமையாக இருந்து அரசியலமைப்பு உரிமைகள் எல்லாம் பறிபோகாமல் காப்பாற்றுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அரசியலமைப்பு சட்டங்களின் பிரிவுகளை வைத்துக்கொண்டு தேர்தல் நேரத்தில் பேசுகிறார்கள் ராகுல் காந்தி அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் அந்த புத்தகத்தை பிரித்து படிப்பதற்கு அருகதை இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்
தற்போது திமுக ஆட்சி நடைபெறுகிறது நெருக்கடி காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தன்னுடைய சுயநலத்திற்காக அரசியல் அதிகாரத்திற்காக இந்திரா காந்தியிடம் பறிகொடுக்கப்பட்டது.
இந்திரா காந்தி கொண்டுவரப்பட்ட நெருக்கடி காலத்தில் இன்றைய தமிழக அமைச்சர் முக ஸ்டாலின் சிறையில் அடைக்கப்பட்டார் அவர் உயிரை காப்பதற்காக திமுகவினர் உயிரை கொடுத்தார்கள் மீண்டும் ஒரு முறை இது போன்ற காலம் வருவதற்கு அனுமதிக்க கூடாது பொதுமக்களுக்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் அவர்களின் நலன் உரிமைகள் அனைவருக்கும் ஆன ஆட்சி என்று பிரதமர் மோடி செயல்படும் நிலையில் அதன் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று மிகுந்த நிகழ்ச்சி மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண மக்களுக்கு கூட நெருக்கடி நிலை காலத்தின் கொடுமைகளை சொல்லும் சூழலில் உள்ளோம்.
அரசியலமைப்பு சட்டத்தை பாஜகவும் பிரதமர் மோடியும் மதிக்கவில்லை என்று காங்கிரஸ் சொல்கிறது இவர்கள் சொல்வதற்கு பதில் சொல்லாவிட்டால் அவர்கள் சொல்வது உண்மை என்று நிலையை வந்துவிடும்.
அரசியலமைப்பு சட்டத்தை மிதித்தது காங்கிரஸ் கட்சி தான்..
திமுக அரசின் லாக்கப் மரணங்கள் புதிதல்ல மாநிலத்தின் முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது தூத்துக்குடியில் லாக்கப் டெத் நடந்த போது தூத்துக்குடியில் முகாமிட்டிருந்தனர் ஆனால் சிவகங்கையில் நடைபெற்றுள்ளது இதை பூசி முழுக பார்க்கிறார்கள். அதற்கு வேறு அர்த்தம் கொடுக்கப் பார்க்கிறார்கள் இது முதன் முதல் முறையல்ல
இதைப் போன்று வேங்கைவயலில் குடிக்கும் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தை துவங்கி இன்றை வரைக்கும் தமிழகத்தில் பட்டிலின மக்கள் மீது தாக்குதல் பெண்கள் மீதான கூட்டங்கள் அதிகரித்தல் லாக்கப் மரணம் என சட்டம் ஒழுங்கை தமிழகம் முழுமையாக இழந்திருக்கும் சூழ்நிலைக்கு சென்றுள்ளது சிறிது சிறிதாக திமுக அரசு தார்மீக கடமையில் இருந்து விலகி சென்றுள்ளது என்பதை இந்த லாக்கப் மரணம் காட்டுகிறது
தமிழகத்தில் போராட்டம் செய்வதற்கு உரிமை இல்லை; பாஜக மகளிர் அணி சார்பாக மதுரையில் போராட்டம் இதைக் கூட செய்வதற்கு அனுமதிக்கவில்லை அனைவரையும் அழைத்து சென்று ஆட்டுக் கொட்டகையில் அடைத்து வைத்தார்கள்.
பாஜகக்கு மட்டுமல்ல பாமக அதிமுக உள்ளிட்ட காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அரசியலமைப்பு சட்டம் கொடுத்த உரிமைகளை திமுக மறுக்கிறது.
திமுக அரசியல் காரணத்திற்காக நிதி வழங்கவில்லை இந்தி திணிப்பு உள்ளிட்டவைகளை கூறுகிறார்கள் கட்டாயம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு ஏதாவது கூறியுள்ளதா என்று கேள்வி எழுப்பினார் திமுகவின் எந்த விஷயத்திலும் உண்மை இருக்காது. திமுகவின் பிரச்சாரத்தில் மிகப்பெரிய யுக்தி என்னவென்றால் இல்லாததை மக்களிடம் பரப்புவது மத்திய அரசின் மீது கோபம் வர வைப்பதற்கு முயற்சிக்கிறது.
இனிமேல் திமுகவின் பிரச்சார யுத்தி எடுபடாது மக்கள் தெளிவாகிக் கொண்டுள்ளனர்
திமுக அணியில் உள்ளவர்களை முதலில் பாதுகாத்துக் கொள்ளட்டும் அப்புறம் எதிர்க்கட்சிக்கு வரட்டும்
எங்கு சிக்கல் வருகிறது என்றால் கல்வி நிதி, மெட்ரோ ரயில் திட்டம், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு உரிய ஆவணங்களை உரிய நேரத்திற்கு கொடுப்பதில்லை.. குற்றச்சாட்டு வருகிறது ஊழல் தவறுகள் நடைபெறுகிறது என்று கேள்வி கேட்டால் பதில் கொடுப்பதில்லை.
தமிழகத்தில் நடைபெறும் தவறுகளுக்கு எல்லாம் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கிறார்கள். மத்திய அரசு கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாது ஆனால் பணம் மட்டும் வர வேண்டும் என்று கூறுகிறார்கள்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆட்சியில் பங்கு உண்டா இல்லையா என்பதை பற்றி பாஜக தமிழக தலைமை கூறமுடியாது தேசிய தலைமை தான் பேசும்.
வருகின்ற 2026 தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அதன் பிறகு என்ன செய்வது என்று பின்னர் பார்த்துக் கொள்கிறோம்.
ரயில் கட்டணம் உயர்வு என்பது ஒரு கிலோ மீட்டருக்கு ஐந்து பைசா என்ற விதம் கட்டணம் உயர்ந்துள்ளது. ரயில்களில் பல புதிய ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளது; ரயில் நிலையங்கள் தூய்மையாக உள்ளது இத்தனை பணிகளுக்கு பைசா கணக்கில் மட்டுமே ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் டெல்லி பயணத்திற்குப் பிறகு நீதிமன்றத்திலும் அமலாக்கத்துறைக்கு தடை வருகிறது வழக்குகளை கைவிடும் சூழலை வருகிறதா என்ற கேள்விக்கு,
வழக்குகளை கைவிடும் சூழல் எல்லாம் ஒரு போதும் நடக்காது. அமலாக்கத்துறை உள்ளிட்ட எந்த துறையை இருந்தாலும் தவறு செய்தவர்களை ஒருபோதும் மத்தியஅரசு விடாது.
தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி போராடும் குரல் கொடுக்கும்
சோலார் மூலமாக தங்களது தேவைக்காக மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளிடமிருந்து பணம் வசூலிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை மாநில அரசு எந்தவித முயற்சி எடுக்கவில்லை சொந்தமாக தொழில் அமைப்புகள் சோலார் தகடுகளை பொருத்தினாலும் பணம் கொடுக்க வேண்டும் என்றால் இது தமிழ்நாடு வளர்ச்சிக்கான அரசாக இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்
திமுக வாக்குறுதியில் மாத மாதம் மின் கட்டணம
கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொய் வாக்குறுதி கொடுத்தார்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவு காலமே வந்துவிட்டது தற்போது அது குறித்து பேசுவதில்லை.
சொத்து வரி பத்திரப்பதிவு ஒரு இடத்தை விட்டு வைக்கவில்லை எல்லா இடத்திலும் சாதன மக்களை பிரிந்து எடுக்கும் அரசாக உள்ளது இங்கிருந்து தமிழக அரசுக்கு பணம் வருகிறது என்றால் டாஸ்மாக்கில் ஊழல்
தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு குறித்து நீதிமன்றம் சொல்லி வருகிறது
தேர்தல் நெருங்க நெருங்க சூழ்நிலைகள் மாறும்;தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய பலம் வாய்ந்த சக்தியாக இரண்டும் மூன்று மாதத்தில் மாறுபாட்டை பார்க்க முடியும்
இன்னும் கூட பலம் பொருந்திய கூட்டணியாக தேசிய ஜனநாயக கூற்றினை மாறி வருகின்ற 2026 தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும்…
நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் தமிழக அரசு தவறு செய்ததை பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டுகிறது. இதற்கும் வசந்து கொடுக்கின்ற அரசு இல்லை என்ன சொன்னாலும் இவ்வாறு தான் இருப்போம் என்று இருக்கிறார்கள் ஏனென்றால் மீண்டும் 2026 ஆட்சிக்கு வரமாட்டோம் என்று திமுகவிற்கு தெரிந்து விட்டது
திமுக கூட்டணியில் உள்ள கட்சி கம்யூனிஸ்ட் கட்சி எப்பொழுதும் அமைதியாக இருப்பார்கள் என்ன செய்ய முடியும்…