கார்த்திகை மாதத்தில் சதுர்த்தசி திதிக்கு மறுநாள் வரும் பௌர்ணமி தினத்தில் திருக்கார்த்திகை விழா சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடத்தில் உள்ள சிவாலயங்களில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆதீன திருமடத்தில் அமைந்துள்ள சொக்கநாதர் பூஜை மடத்தில் சிறப்பு பூஜைகள் செய்வித்து அங்கிருந்து தீபத்தை சுமந்து ஞானபுரீஸ்வரர், தருமபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் மடத்துக்கு எதிரில் பனை ஓலைகள் கொண்டு அமைக்கப்பட்டிருந்த சொக்கர் பனைக்கு தீபம் ஏற்றி கொளுத்தினார். இதில், ஆதீன கட்டளை தம்பிரான்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

















