குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் கூடாரம் மட்டுமே காட்சியளித்த அவலம்
வனத்துறை அலட்சியத்தை கண்டித்து போராட்டம் நடத்த போவதாக அதிமுக அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாற்றில் முதலை உலாவி வருவதாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தகவல் பரவியதுடன், இது சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியதை தொடர்ந்து
வனத்துறை அடிக்கடி முதலை உலாவி வந்த இடத்தில் கூடாரம் போட்டு முகாம் அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்சன் களியல் வனத்துறை அலுவலகத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க மனு அளித்து விட்டு முதலை அடிக்கடி தென் படும் பகுதிக்கு சென்றார் அப்போது வனத்துறை சார்பில் அமைக்க பட்ட முகாம் கூடாரம் மட்டுமே அங்கு இருந்ததே தவிர வனத்துறையினர் யாரும் அங்கு இல்லை இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வனத்துறை அலட்சியத்தால் பொதுமக்கள் மற்றும் திற்பரப்பு அருவி சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது வனத்துறை அலட்சியத்தை கண்டித்து போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார்













