தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் சுருளிமலை என்னுமிடத்தில் சுருளிவேலப்பர் ஆலயம் அமைந்துள்ளது. சிவனின் திருமணத்தின் போது அனைவரும் இமயமலைக்கு சென்றுவிட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சமநிலையை இழக்க சிவன் தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார்.
பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார். இதனால் தான் இக்குகைக்கு சைலாசகுகை எனப்பெயர் பெற்றது.
இங்கு விபூதிக்குகை, சர்ப்ப்குகை, பாட்டையாகுகை, கிருஷ்ணன்குகை, கன்னிமார்குகை என பல குகைகள் தனித்தனி தீர்த்தங்களுடன் உள்ளன. விபூதிக்குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுவது. இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து தீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிப்பது.
48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை, தழைகள் பாறை போல மாறுவது, பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசம் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது.
ஓம்கார வடிவில் உள்ள இம்மலையில் கன்னிமார்கள் நடனமாடிய ரேகைகளுடனான பாறை உள்ளது. இதில் தவம் செய்திய பாவங்கள் விலகி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருமுருகாற்றுப்படையில் மலைகள் அனைத்தும் முருகனுக்கே சொந்தம் எனக்குறிப்பிடும் நக்கீரர் மலைக்கோயில்களை குன்றுதோறாடல் என்கிறார். இத்தலமும் குன்றுதோறாடல் என்றே அழைக்கப்படுகிறது. சுருளிவேலப்பர் மலையில் இயற்கையாகத் தோன்றிய குடவரை சன்னதில் காட்சி தருகிறார். அருகில் விநாயகர். மகாலிங்கம் சந்தான கீருஷ்ணர் வீரபாகு ராமபிரான் லட்சுமணன் உள்ளனர்.

இந்த மலைபகுதியில் சித்தர்கள் வாழ்வதாக சொல்கிறார்கள். இங்குள்ள ஒரு குகையில் கைலாசநாதம் சன்னதியும். குகையில் மேலேயுள்ள குன்றில் முருகன் சன்னதியும் உள்ளன. குகைக்குள் ஒவ்வொருவராக ஊர்ந்து சென்று வழிபட முடியும். குகையில் உள்பகுதியில் இருவர் மட்டும் அமர்ந்து
பூஜை செய்யலாம். குகைக்குள் இருந்து தீர்த்தம் வந்து கொண்டிருக்கிறது.
மகாவிஷ்;ணுவின் மகளான வள்ளியை மலையரசனான நம்பிராஜன் வளர்த்தார். வுள்ளியை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு சீர்வரிசையாக இம்மலைபிரதேசங்களை கொடுத்தார். இதில் ஒருமலை தான் சுருளிமலை. இம்மலையில் முருகன் பெருமான் குடிகொண்டுள்ளாhர். ஒருசமயம் சனிபகவான் தன்சஞ்சாரப்படி தேவர்களை பிடிக்க வேண்டியிருந்;தது.
துங்களை காத்தருளும்படி இங்குள்ள முருகனிடம் தஞ்சமடைந்தனர். முருகப்பெருமான் அடைக்கலம் தந்து காத்தருளினார். இத்தலத்தில் சுருதியுடன் அருவி கொட்டுவதால் சுருதி எனப்பட்ட தீர்த்தம் சுருளி என மருவியது. இதனால் இத்தலத்திலுள்ள முருகப்பெருமானுக்கு சுருளி வேலப்பர் என்று பெயர் ஏற்பட்டது.
ஆண்டிக்கோலத்தில் முருகப்பெருமான் காட்சியளிப்பதால் சுருளியாண்டி என்று அழைக்கப்பட்டார்.

ராவணேஸ்வரன் தநத தவத்தால் அண்டசாரசங்கள் அனைத்தையும் ஆளும்படி வரம் பெற்று தேவர்களை கொடுமைப்படுத்தினான். அவனுக்கு முடிவு கட் ட எண்ணிய தேவர்கள் ரிஷிகள் சித்தார்கள் ஆகியோர் கைலாசநாதர் குகையில் மகாவிஷ்ணு தலைமையில் ஆலோசனை செய்தனர். அவர்களை அழிக்க ராவணேஸ்வரன் தனது அரக்கர் படையுடன் இங்கு வந்தான்.
தேவர்களை காக்க விஷ்ணு பூத சொரூபத்துடன் பஞ்சபூதங்களாக விண்ணுக்கும் மண்ணுக்கும் நின்றார். அவரது கோலத்தை கண்டு பயந்த ராவணேஸவரன் தன் அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான். இவ்வாறு தேவர்கள் ரிஷிகள் சித்தர்கள் தவம் புரிந்த கைலாசகுகையில் மேல் பகுதியில் சுருளிவேலப்பர் அருள் புரிகிறார்.
முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேகங்கள், பரல்குடம் எடுத்து முடிக்காணிக்கை செலுத்தி சுரபி நதியில் நீராடி வணங்கினால் பாவம் நீங்கும்.
தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் அன்னதானம் செய்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
இந்த திருக்கோயிலில் சித்திரை திருவிழா, ஆடி பதினெட்டாம் பெருக்கு, ஆடி தை அமாவாசை தைப்பூசம் வைகுண்ட ஏகாதேசி சிவராத்திரி பங்குனி உத்திரம் விசேஷ நாட்களாகும்.















