முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி அவர்களின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது . அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ரயில் நிலையம் அருகில் உள்ள முன்னாள் கூட்டுத்துறை அமைச்சர் கோ.சி.மணி அவர்களின் 97 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் , மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ, சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு குத்தாலம் ரயில் நிலையம் அருகில் உள்ள முன்னாள் அமைச்சர் கோசி .மணியின் திருவருள் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் அதனைத் தொடர்ந்து ஆடுதுறை உள்ள அவரது இல்லத்தில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர் .
அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ஆனாங்கூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினர். அப்போது மாநில,மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
