மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற 25-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற 25-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழாவில் ஏராளமானோர் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய நிகழ்ச்சியில் ஆலயத்தில் ஆக்ரோஷமாக திருநடனம் புரிந்த பச்சக்காளி பவளக்காளி ஆட்டங்கள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்றதுமான அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. இங்கு ஸ்ரீ அகோர வீரபத்திரர், பெரியாண்டவர், தூண்டி வீரன், சப்த கன்னிகள் ஐயப்பன், பேச்சியம்மன் சன்னதிகள் உள்ளன.
25-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா; ஏராளமானோர் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்:-

மயிலாடுதுறை காமராஜர் சாலையில்
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்றதுமான அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. இங்கு ஸ்ரீ அகோர வீரபத்திரர், பெரியாண்டவர், தூண்டி வீரன், சப்த கன்னிகள் ஐயப்பன், பேச்சியம்மன் சன்னதிகள் உள்ளது இப்பகுதி மக்கள் பலரின் குலதெய்வ கோயிலாக விளங்கும் இக்கோயிலில் 25- ஆம் ஆண்டு பால்குட திருவிழா இன்று நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக கடந்த மாதம் 31-ஆம் தேதி பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இன்று விழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் காவிரிக் கரையில் இருந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க பால்குடம் எடுத்து தலையில் சுமந்து கோயிலை வந்தடைந்தனர். அங்கு பக்தர்கள் எடுத்து வந்த பாலினை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. முன்னதாக கோயிலில் நடைபெற்ற பச்சைக்காளி பவளக்காளிகளின் ஆக்ரோஷ நடனம் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து கஞ்சிவார்த்தல் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Exit mobile version