தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் இருந்த 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று பொக்கிஷமான போர்வாள் மாயம் விசாரணை தொடங்கியது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ளது 1620 ஆம் ஆண்டு சேர்ந்த வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை டென்மார்க் நாட்டினர் டேனிஸ்காரர்களால் வாணிபம் செய்வதற்காக வந்து இந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் அவர்கள் நிர்வாகம் செய்வதற்காக கோட்டையாக அமைக்கப்பட்டு இந்த டேனிஷ் கோட்டை தற்பொழுது அருங்காட்சியமாகவும் அகழ் வைப்பகமாகவும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது டேனிஷ் கோட்டை அகழ் வைப்பகத்தை அருங்காட்சியகத்தைப் பார்ப்பதற்காக தினமும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் இளைஞர்கள் மாணவர்கள் பார்வை இடுவதற்காக வந்து செல்கின்றனர் வெளிநாட்டினரும் இந்த டேன்னிஸ் கோட்டையை வந்து பார்த்து செல்கின்றனர் இந்நிலையில் டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் பல்வேறு வரலாற்று பொக்கிஷங்கள் சுவடுகள் சிலைகள் போர் ஆயுதங்கள் நாணயங்கள் செப்பேடுகள் ஆவணங்கள் பழங்கால பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன இந்நிலையில் பாதுகாப்பான முறையில் கண்ணாடி பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள இந்த பொருட்கள் இதுவரையில் எந்த நிலையிலும் திருடு போகாமல் இருந்தது ஆனால் தற்பொழுது கண்ணாடி பெட்டியில் இருந்த 17-ம் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த போர்வாள் ஒன்று காணவில்லை என அதிர்ச்சி தகவல் வந்துள்ளது தற்பொழுது டேனிஷ் கோட்டை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி மாலையில் அனைத்து பொக்கிஷங்களும் பாதுகாப்பாக இருந்த நிலையில் மறுநாள் டிசம்பர் 25ஆம் தேதி வந்து பார்க்கும் பொழுது கண்ணாடி பெட்டியில் இருந்த இரண்டு போர்வாள்களில் ஒரு போர்வாள் காணவில்லை எனக் கூறப்படுகிறது இந்நிலையில் டேனிஷ் கோட்டை இளநிலை உதவியாளர் தினேஷ்குமார் என்பவர் பொறையார் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அருங்காட்சியகத்தில் இருந்த பாதுகாப்பாக இருந்த போர்வாள் ஒன்று காணவில்லை என்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

















