தரங்கம்பாடி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பு

தரங்கம்பாடி அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எரவாஞ்சேரி, சங்கரன்பந்தல், இலுப்பூர்,உத்திரங்குடி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்து வழிபட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது சங்கரன்பந்தல் கடைவீதியில் சுமார் ஏழுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு மேள வாத்தியங்கள் முழங்க இளைஞர்கள் ஆரவாரத்துடன் சென்று வீரசோழன் ஆற்றில் கரைத்தனர் அதேபோன்று தரங்கம்பாடி தாலுக்காவில் பல்வேறு பகுதிகளில் வைத்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தரங்கம்பாடி கடற்கரையில் கடலில் கரைக்கப்பட்டது விநாயகர் சிலைகள் ஊர்வலம் காரணமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Exit mobile version