தேனீபுரீஸ்வரர் திருக்கோயில்

சென்னை தாம்பரம்- வேளச்சேரி செல்லும் சாலையில் ராஜகீழ்ப்பாக்கத்திலிருந்து சுமார் மூன்றரை கி.மீ. தூரத்தில் உள்ளது மாடம்பாக்கம். இங்கே சோழர் காலக் கட்டுமானத்துடன் அமைந்துள்ளது ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயம்.

இந்த ஆலயத்தில், சிறிய அளவில் பசுவின் கொம்பு வடிவில் திகழும் லிங்கத் திருமேனி போன்று வேறெங்கும் கிடையாது. குபில மகரிஷி சகரன் என்பவனினி மகனை சபித்துவிட்டார். இந்த சாபம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வசிஷ்ஷிடரின் ஆலோசனைப்படி சகரனின் குலத்தில் வந்த பகீரதன் கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்து சிவபூஜை செய்து சாபவிமோசனம் தேடிக்கொண்டான். தனது கோபத்தால் சகரனின் தலைமுறை பாதிக்கப்பட்டதை எண்ணி வருந்திய கபிலர்.

ஒரு லிங்கத்தை இடது கையில் வைத்து வலது கையால் மலர்களைத் தூவினார். அப்போது காட்சி தந்த சிவன் தன்னை கையில் வைத்து வணங்கியதன் காரணம் கேட்க மணலில் லிங்கத்தை வைக்க மனமில்லை என்றார் சிவன் அவரிடம் கையில் லிங்கத்தை வைத்து பூஜித்த முறை சரியில்ல எனச்சொல்லி அவரை பசுவாகப் பிறக்க செய்து விட்டார்.

பசுவாக பிறந்த கபிலர். பிறகு அவரை எஜமான் ஒருவர் வளர்;த்து வந்தார். திடீரென்று அந்த பசு பால் கறக்கவில்லை. மடி வற்றிக் கிடந்தது கண்டு அதன் எஜமானனுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. பசு, மேய்ச்சல் நிலத்துக்கு அருகில் சுயம்புவாகத் தோன்றியிருந்த சிவலிங்கத்தின் மீது தினமும் பாலைச் சொரிந்து வழிபட்டு வந்தது. அதன் காரணமாகவே ஒவ்வொரு நாளும் வற்றிய மடியுடன் வீடு திரும்பியது.

சிவலிங்கத்தை வழிபட்டதற்கான பலன் இப்போது கிடைத்துவிட்டது. பாவ விமோசனம் பெற்று மீண்டும் தன் சுய உருவை அடைந்தார் கபில மகரிஷி
பசுவின் கால் குளம்பை இடறச் செய்தது ஒரு சிறிய சிவலிங்கம்தான். இருகரம் கூப்பி அந்தச் சிவ லிங்கத்தை கபிலர் வணங்கி நின்றார்.

பின்னாளில், இறை அனுக்கிரகத்தால் இந்த அற்புதச் சம்பவங்களை எல்லாம் கனவின் மூலம் கண்டு உணர்ந்தான் சோழ மன்னன் ஒருவன். அற்புதமான அந்தச் சிவலிங்கம் ஏரிக்குள் இருப்பதை அறிந்து, லிங்கத் திருமேனியை வெளியில் எடுத்து, ஆலயம் அமைத்தான். அதுவே மாடம்பாக்கம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயம்.
அகத்தியரால் சபிக்கப்பட்ட தேவேந்திரனும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டு விமோசனம் பெற்றதாகச் சொல்கிறது தலபுராணம்.

மூலஸ்தானத்தில் சுவாமி சதுரபீடத்தில் சுமார் ஒரு ஜாண் உயரத்தில் சிறிய மூர்த்தியாக காட்சியளிக்கிறார். லிங்க அகலம் 3 விரற்கிடை மூன்று விரல்களை சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு மட்டுமே இருக்கிறது. பசு மிதித்த தழும்பும் கல்லடி பட்ட பள்ளமும் இருக்கிறது. லிங்கத்தில் சிறிய மண்டபம் போன்று அமைப்பும் நாகாபரணமும் அணிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலுள்ள தூண்களில் பல சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது. தூணில் சிற்பமாக சரபேஸ்வரர் காட்சி தருகிறார். ஒரு தூணில் விநாயகர் கையில் வீணையுடன் காட்சியும், மற்றொரு தூணில் முருகன் யானை மீது அமர்ந்த கோலத்தில் இடது கையில் சேவலுடன் காட்சியளிக்கிறார்கள் மேலும், பசும்பால் கறந்து எடுத்து வந்து இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசரபேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும், கடன்தொல்லை முதலான க~;டங்கள் அகலும் என்பது ஐதீகம்.

தொடர்ந்து ஆறு ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு காலத்தில் தூணில் சிற்பமாக வீற்றிருக்கும் சரபேஸ்வரரை வழிபட்டால், நினைத்தது கைகூடும் கிரக தோ~ம், நாக தோஷம் முதலானவை நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். இந்தச் சிவாலயத்தில் பங்குனி உத்திர விழா விஷேஷம் இந்த விழாவின் போது நிகழும் திருக்கல்யாணம் மற்றும் தெப்போத்ஸவத்தைக் காணப் பக்தகோடிகள் தரிசனம் செய்து செல்வார்கள்.

சுpவனை வணங்கியபடி திருமால் மற்றும் பிரம்மா கங்கா பார்வதியுடன் சிவன், வாசுகி நாகத்தின் மீதுள்ள தாமலையில் அமர்ந்த சிவன். மனைவியருடன் தட்சிணாமூர்த்தி மற்றும் பைரவர் மடியில் சீதையை அமர்;த்தியிருக்கும் ராமனின் பாதம் தொட்டு வணங்கும் ஆஞ்சநேயர் ஐந்து முகங்களுடன் பிரம்மா ஆகியோர்கள் காட்சியளிக்கிறார்கள்.

திருமணத் தடை உள்ளவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு இதயச் சுத்தியோடு ஸ்வாமி- அம்பாளைத் தரிசித்து வழிபட, விரைவில் இல்லத்தில் கெட்டிமேளம் கொட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்கு உள்ள ஸ்ரீவடுகபைரவரும் சாந்நித்தியம் வாய்ந்தவர். தேய்பிறை அஷ்டமி தினங்களில் இந்த ஆலயத்துக்கு வந்து, பைரவருக்கு திராட்சை மாலை அணிவித்து, வெள்ளைப் பூசணியில் நெய் விளக்கு ஏற்றி வழிபடுவது மிகச் சிறந்த பலனைத் தரும். அருணகிரியார் முதலாக அருளாளர்கள் பலரும் போற்றிய ஸ்ரீதேனுபுரீஸ்வரரை வழிபட்டு, வரம்பெறுவோம்.

Exit mobile version