சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி,ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய தைப்பூச விழா திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயிலடி சாலையில் மார்கோனி மந்திராலயா கார்டனில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலயத்தில் தைப்பூச விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.நூற்றுக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து அழகு காவடி எடுத்து நிறுத்தி கடன் செலுத்தினர். வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஆலய த்தில் ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை, ஸ்ரீ வேல்முருகன் சுவாமிக்கு மாப்பொடி, மஞ்சள் பொடி,திரவிய பொடி, பால் ,சந்தனம், பஞ்சாமிர்தம் , உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் சுவாமிக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளுடன் தைபூச வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை சமேத வேல்முருகன் சுவாமியை வழிபாடு மேற்கொண்டனர். தொடர்ந்து மகா தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
