ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு ; ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி செக்டார் எல்லைப்பகுதியில், பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்த துப்பாக்கிச்சண்டையில், ராணுவ வீரர் பனோத் அனில்குமார் வீரமரணம் அடைந்தார்.

நேற்று பின்னிரவு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே, பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதை ராணுவத்தினர் கண்டறிந்தனர். இதனை தடுக்க அவர்கள் உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலளித்த பயங்கரவாதிகளும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இறுதியில், ராணுவத்தின் தீவிர நடவடிக்கையால் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பினர். சம்பவத்திற்குப் பின்னர், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version