மும்பை நகரில் 34 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக வந்த மிரட்டல் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மாநகர போலீஸ் உதவி மையத்திற்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பில், 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட 34 வாகனங்கள் நகரில் நுழைந்துள்ளதாகவும், அவை வெடித்தால் மொத்த நகரமும் அழிந்து விடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ்அப் எண்ணுக்கும் இதேபோன்ற அச்சுறுத்தல் வந்துள்ளது. மேலும், இந்த மிரட்டல் செய்தியில் லஷ்கர்-இ-ஜிஹாதி அமைப்பைச் சேர்ந்த 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் நுழைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மும்பை போலீசார் அதிர்ச்சி அடைந்து, மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தினர். தற்போது இந்த மிரட்டல் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
















