கழகப் பொதுச் செயலாளருக்கு காலக்கெடு வைக்கும் உரிமை செங்கோட்டையனுக்கு மட்டுமல்ல எவருக்கும் கிடையாது

முன்னாள் அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் பேட்டி *செங்கோட்டையனை இயக்குவது வேறு யாருமில்லை.. அவர் உடம்பில் ஓடுவது அதிமுக இரத்தம் என்று கூறுபவர் தான். கழகப் பொதுச் செயலாளருக்கு காலக்கெடு வைக்கும் உரிமை செங்கோட்டையனுக்கு மட்டுமல்ல எவருக்கும் கிடையாது முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பேட்டி

முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளரும் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தளவாய் சுந்தரம் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், முதலமைச்சர் வெளிநாட்டு சுற்றுப்பயணமானது சொந்த சுற்றுப்பயணம். தமிழகத்திற்கு எந்த நிதியும் வந்த மாதிரி தெரியவில்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. கொலை, கொள்ளை நடந்து வருகிறது. கஞ்சா போதைப் பொருட்கள் குறித்து பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செங்கோட்டையன் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவர் மூத்த தலைவர். அனைவரும் சேர்ந்து ஒரு தலைமையைத் தேர்ந்தெடுத்து விட்டால் அந்த தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். ஆனால் இவர் பொதுச் செயலாளருக்கு காலக்கெடு கொடுப்பதற்கு அதிகாரம் கிடையாது. கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்து கொண்டு போய்க் கொண்டிருக்கும் சூழலில் அவரை தொந்தரவு செய்தால் மக்கள், தொண்டர்கள் எவ்வாரு ஏற்றுக் கொள்வார்கள். அவருக்கு ஓடக்கூடிய இரத்தம் அண்ணா திமுக இரத்தம் என்று இன்னொருத்தர் கூறுகின்றார். இந்த ரத்த கதையை கூறுபவர் தான் இதற்கு பின்னால் இருக்கின்றார்.

ஓபிஎஸ் பதவி வேண்டாம் எங்களை சேர்த்து கொண்டால் போதும் என்று கூறுகின்றார். வெளியில் மேடைக்கு மேடை பதவி வேண்டாம் என்று கூறுகின்றார். மோடி துணை முதல்வர் பதவி கொடுத்தார் என்று கூறுகின்றார். இதை பொது வெளியில் கூறலாமா. மேலும், அவர் யாரை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறுகின்றார். உங்களுடன் எத்தனை பேர் இருக்கின்றார்கள். செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று வந்து இருக்கிறார். 10 நாளுக்கு காலக்கெடு என்று சொன்னால் பொதுச் செயலாளர் என்ன செய்ய முடியும்.

மேலும், இந்த சதிக்கு பின்னால் ரத்தம் அண்ணா திமுக இரத்தம் என்று யார் கூறுகிறார்களோ அவர்கள் தான் உள்ளார்கள். ரத்தத்தில் ஏபி பாசிட்டிவ் என்று தான் இருக்கும். ஆனால் செங்கோட்டையனுக்கு மட்டும் அண்ணா திமுக இரத்தம் ஓடுகிறது என்றார். பேட்டியின் போது கழக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் ஆரல்வாய்மொழி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவருமான முத்துக்குமார் கிழக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலருமான அக்ஷயா கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

பேட்டி:- என்.தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்

Exit mobile version