தஞ்சையை சேர்ந்த சீதா என்ற பெண்மணி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நபர்களிடம் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு உரிய விசா வழங்காமல் சுற்றுலா விசாவில் அனுப்பி அங்கு உள்ள நபர்களிடம் விற்பனை செய்து விடுவதாகவும், அவர்களை வாங்கியவர்கள் உரிய ஊதியம் வழங்காமல் தங்களை அடிமை போல் வேலை வாங்குவதாகவும், ஊதியம் கேட்டால் மிரட்டுவதாகவும் தங்களை அனுப்பிய சீதா என்ற பெண்மணியிடம் கேட்டபோது தரக்குறைவாக பேசுவதாக குற்றம் சாட்டிய பாதிக்கப்பட்டவர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர், அவர்கள் தாங்கள் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் தங்களைப் போல் பாதிக்கப்பட்டு நிறைய பேர் வெளிநாட்டில் சிக்கி உள்ளார்கள் அவர்களை மீட்க வேண்டும் மேலும் இவர்கள் மீண்டும் முறைகேட்டில் ஈடுபடாதவாறு அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். இது மட்டுமின்றி உரிய அனுமதி இல்லாமல் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்புவதாகவும் முறையாக விசா வழங்குவதில்லை பணத்தை அதிகளவு பெற்றுக் கொண்டு தங்களை விற்று விடுவதாகவும் தகாத வேலைக்கு அனுப்புவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றி விட்டதாக கண்ணீர் மல்க புகார்
-
By gowtham

- Categories: News
- Tags: district newsthanjavur
Related Content
Today Headlines | தலைப்புச் செய்திகள் - 09 August 2025 | Retro tamil
By
Digital Team
August 9, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் - 08 August 2025 | Retro tamil
By
Divya
August 8, 2025
கணவரைக் கொன்ற மனைவி – காதலனுடன் சேர்ந்து கொடூரம்!
By
Divya
August 8, 2025
'கலைஞரின் கனவு இல்லம்' திட்ட வீடு ரத்து – ஐகோர்ட்டில் கடும் விமர்சனம்
By
Divya
August 8, 2025