வீரர்களை போட்டிபோட்டு ஏலத்தில் எடுத்த அணிகள் – யார் யார் எந்த அணி?

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கீரினை கொல்கத்தா அணி 25 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.இவரை ஏலம் எடுக்க சிஎஸ்கே அணியும் இறுதி வரை முயற்சி மேற்கொண்டது.ஆனால் கொல்லக்தா அந்த வாய்ப்பை தட்டி பறித்தது.வெளிநாட்டு வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்ற சாதனையை கிரீன் படைத்துள்ளார்.

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்ரினாவும் அதிகளவில் ஏலம் போனார். அவரை கொல்கத்தா அணி 18 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

இந்திய வீரர் வெங்கடேஷ் அய்யரை 7 கோடி ரூபாய்க்கு பெங்களுரு அணி ஏலம் எடுத்தது.

தென்னாப்ப்ரிகா அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லரை டெல்லி அணி அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

இலங்கை சுழற் பந்து வீச்சாளர் ஹஸ்ராங்காவை லக்னோ அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

தென்னாப்ரிகா விக்கெட் கீப்பர் டிக்காக்கை மும்பை அணி ஒரு கோடி ரூபாய்க்கு வாக்கியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நியிசிலாந்து வீரர் ரச்சின் ரவிந்திரா, இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டன், இந்தியாவின் சர்ப்ரஸ்கான் ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version