மயிலாடுதுறை கூறைநாடு குருக்கள் பண்டாரத்தெருவை சேர்ந்த டெய்லர் ராஜ்மோகன்(51) இவர் கட்டுவதிலிருந்து எதிர்வீட்டில் குடியிருந்துவரும் போலீஸ்காரர் அழகேந்திரன், இரவு நேரத்தில் குடிபோதையில் திட்டிவந்துள்ளார், இதுகுறித்து சென்ற ஆண்டு மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார் இருவரிடமும் சமாதானம் பேசி எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளனர், மீண்டும் தொல்லை தந்ததால் தமது வீட்டை விட்டுவிட்டு வாடகை வீட்டிற்கு ராஜ்மோகன் சென்றுள்ளார், ஓராண்டு கழித்து மீண்டும் தம்சொந்த வீட்டிற்கே வந்துள்ளார், ஆனால் அழகேந்திரனின் தொல்லை மீண்டும் தொடர்ந்தது, கடந்த 28ஆம் தேதி இரவு அதே பகுதியில் உள்ள சுப்ரமணியன் கோயிலுக்கு குடும்பத்தாருடன் சென்றபோது அங்கே இருந்த போலீஸ்காரர், ராஜ்மோகனை அடித்தும் முகத்தில் குத்தித் தள்ளியுள்ளார், எதிர்த்துக் கேட்ட அவரது மனைவி சாந்தியை சகட்டுமேனிக்குத்திட்டியுள்ளார், காயமடைந்த ராஜ்மோகன் மயிலாடுதுறை அரசுமருத்துவமனையில் சிகிச்சையில்உள்ளார், இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவுசெய்யாமல் மிரட்டியதாக கூறப்படுகிறது,
இந்த போலீஸ்காரரால் தொடர்ந்து தொல்லை இருப்பதாகவும், தங்களால் கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் வாழ முடியவில்லை என்றும் போலீசார் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்

 
			















