தமிழ்ப் புத்தாண்டு 2025 : வாழ்த்து சொன்ன தலைவர்கள்

சித்திரை திருநாள் அல்லது தமிழ் புத்தாண்டு என்றால் என்ன ?

தமிழ் புத்தாண்டு அன்று புத்தாடை அணிந்து, கோவிலுக்கு சென்று, பொங்கல் வைத்து வழிபடுவது, உறவினர்களுக்கு இனிப்பு வழங்குவது, பெரியோரிடம் ஆசி பெறுவது வழக்கம்.

குறிப்பாக தாம்பூல தட்டில் முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் பிற பழங்கள் ஒரு எலுமிச்சம் பழம், வெற்றிலை பாக்கு, பூக்கள், மஞ்சள், குங்குமம், நகைகள், ரூபாய் நோட்டுகள், முகம் பார்க்கும் கண்ணாடி ஆகியவற்றை கடவுள் படத்தின் முன் வைத்துக்கொள்ள வேண்டும்.

புத்தாண்டு அன்று காலை எழுந்தவுடன் தாம்பூல தட்டில் உள்ள கனிகளை பார்த்தபடி கண்விழிக்க வேண்டும் .

அறுசுவை சமையல் செய்து இறைவனுக்கு படைத்தது உண்ண வேண்டும்.

வீட்டில் இருக்கும் முதியவர்கள் வயதில் சிறியவர்களுக்கு பணம் கொடுத்து வாழ்த்துவது வழக்கம்.

ஜனாதிபதி முர்மு

நம் நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்த பண்டிகைகளை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அனைவரின் பசி போக்கும் உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த பண்டிகைகள் இயற்கை மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.

எனவே நாட்டின் வளர்ச்சிக்கு இந்த பண்டிகைகள் மிகச் சிறந்த ஊக்கமளிக்கட்டும் என்று ஜனாதிபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

உலங்கெங்கிலும் உள்ள எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும்.

Exit mobile version