திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்களின் 30 ஆண்டுகள் கோரிக்கையான அரசு பேருந்து சேவையை தொடங்கி வைத்திருப்பதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றி தந்த முதல்வரை தெய்வம் ரூபத்தில் பார்ப்பதாகவும் மீண்டும் அவர் ஆட்சியை தொடர்ந்து வர வேண்டும் என கிராம பொதுமக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்,
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது கூவம் ஆற்றின் கரையோரமாக உள்ள தண்டலம் இக்கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 2000 மக்கள் வசித்து வருகின்றனர், அப்பகுதி மக்கள் கல்வி நிறுவனங்கள் வேலைகளுக்கு செல்வதற்கும் விவசாயிகள் விவசாய பொருட்கள் வாங்குவதற்கும் திருவள்ளூர் கடம்பத்தூர் 8 கிலோமீட்டர் நடந்து சென்று வந்திருந்தனர்,
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிகள் முதியவர்கள் கூட விரைந்து மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்திருந்தனர்.
இந்தநிலையில் இந்த கிராமமக்கள் கடந்த 30 ஆண்டுகளாக பேருந்து வசதி வேண்டி சாலை மறியல் உண்ணாவிரதம் என பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று திருவள்ளூரில் இருந்து தண்டலம் வழியாக அரசு பேருந்து தடம் எண் 160 என்ற பேருந்து சேவையை திருவள்ளூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் விஜி.ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார், அதனை தொடர்ந்து கிராமமக்களுடன் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் பேருந்தில் ஏற்றிச்சென்று மகிழ்ச்சியான பயணத்தை தொடங்கி வைத்தார்.
இதனை அடுத்து பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றி தந்த முதல்வரை தெய்வம் ரூபத்தில் பார்ப்பதாகவும் மீண்டும் அவர் ஆட்சியே தொடர்ந்து வர வேண்டும் என கிராம பொதுமக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர், இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் போக்குவரத்து துறை அதிகாரிகள் கிராமமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்,